• Dec 24 2024

பாடசாலை உபகரணங்களின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை

Chithra / Dec 23rd 2024, 7:25 am
image

 

புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கவுள்ள நிலையில்,  பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்குவதில் பெற்றோர்கள் மும்முரமாக உள்ளனர்.

பாடசாலை உபகரணங்களின் விலை இன்னும் அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சில பாடசாலை உபகரணங்களின் விலைகள் ஏறக்குறைய இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அரசாங்கம் நீக்கினால் இந்த நிலைமைக்கு தீர்வு கிடைக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை உடனடியாக நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பாடசாலை உபகரணங்களின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை  புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கவுள்ள நிலையில்,  பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்குவதில் பெற்றோர்கள் மும்முரமாக உள்ளனர்.பாடசாலை உபகரணங்களின் விலை இன்னும் அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.சில பாடசாலை உபகரணங்களின் விலைகள் ஏறக்குறைய இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அரசாங்கம் நீக்கினால் இந்த நிலைமைக்கு தீர்வு கிடைக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை உடனடியாக நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement