• Apr 30 2024

ஒளி பாய்ச்சி சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மின் பிடிக்க தடை

Chithra / Dec 3rd 2022, 11:20 am
image

Advertisement

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காடு கடற்பரப்பில் சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மின் ஒளி பாய்ச்சி மீன் பிடிக்கும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக தமது பகுதி கடற்பரப்பில் குறித்த கடற்றொழில் நடவடிக்கையை சில தொழிலாளர்கள் முன்னெடுத்து வருவதால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுவருவதாக சுட்டிக்காட்டி வரும் கடற்றொழில் சங்கங்கள் அதனை தடைசெய்யுமாறு வலியுறுத்தி வந்திருந்ததுடன் இவ்விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கும் கொண்டுசென்றிருந்தனர்.

இந்நிலையில் துறைசார் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து வெள்ளிக்கிழமை ( 02 ) கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில், ஒளி பாய்ச்சி சிறிய கண் வலைகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த துறைசார் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணக்கம் தெவித்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று (02.12.2022 ) முதல் குறித்த தொழில் நடவடிக்கைகள் தடை செய்யப்படுவதுடன் அதனை மீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் மட்ட கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

ஒளி பாய்ச்சி சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மின் பிடிக்க தடை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காடு கடற்பரப்பில் சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மின் ஒளி பாய்ச்சி மீன் பிடிக்கும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீண்டகாலமாக தமது பகுதி கடற்பரப்பில் குறித்த கடற்றொழில் நடவடிக்கையை சில தொழிலாளர்கள் முன்னெடுத்து வருவதால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுவருவதாக சுட்டிக்காட்டி வரும் கடற்றொழில் சங்கங்கள் அதனை தடைசெய்யுமாறு வலியுறுத்தி வந்திருந்ததுடன் இவ்விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கும் கொண்டுசென்றிருந்தனர்.இந்நிலையில் துறைசார் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து வெள்ளிக்கிழமை ( 02 ) கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தனர்.குறித்த கலந்துரையாடலில், ஒளி பாய்ச்சி சிறிய கண் வலைகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த துறைசார் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணக்கம் தெவித்துள்ளனர்.இதனையடுத்து நேற்று (02.12.2022 ) முதல் குறித்த தொழில் நடவடிக்கைகள் தடை செய்யப்படுவதுடன் அதனை மீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் மட்ட கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement