மன்னார் - பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகங்கள் சில சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (11) மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினரால் கண்காணிக்கப்பட்ட நிலையில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காரணமாக உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மன்னார் பள்ளிமுனை இலங்கை வங்கிக்கு அருகில் அமைந்திருக்கும் குறித்த உணவகங்கள் உரிய முறையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அகப்பட்டது.
குறித்த உணவகங்கள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்ததுடன் உணவகத்தின் கழிவு நீர் உரிய விதமாக அகற்றப்படாமல் புழுக்கள் இளையான் உருவாகியும் அதே நேரம் ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தமை, அத்துடன் உணவு பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சிய படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
அதன் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு எதிராகவும் உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் - பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் மன்னார் - பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகங்கள் சில சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (11) மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினரால் கண்காணிக்கப்பட்ட நிலையில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காரணமாக உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.மன்னார் பள்ளிமுனை இலங்கை வங்கிக்கு அருகில் அமைந்திருக்கும் குறித்த உணவகங்கள் உரிய முறையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அகப்பட்டது.குறித்த உணவகங்கள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்ததுடன் உணவகத்தின் கழிவு நீர் உரிய விதமாக அகற்றப்படாமல் புழுக்கள் இளையான் உருவாகியும் அதே நேரம் ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தமை, அத்துடன் உணவு பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சிய படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.அதன் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு எதிராகவும் உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.