கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாமாங்க பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியிலிருந்து நேற்று மாலை (23) இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி 2 தோட்டாக்களுடன் இயங்கு நிலையில் காணப்பட்டதுடன்,
ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டது என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அத்துடன், மீட்கப்பட்ட இந்தத் துப்பாக்கி தொடர்பில் இதுவரையில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கல்முனை பிராந்திய தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கல்முனை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் துப்பாக்கி மீட்பு கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மாமாங்க பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியிலிருந்து நேற்று மாலை (23) இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குறித்த துப்பாக்கி 2 தோட்டாக்களுடன் இயங்கு நிலையில் காணப்பட்டதுடன்,ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டது என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.அத்துடன், மீட்கப்பட்ட இந்தத் துப்பாக்கி தொடர்பில் இதுவரையில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கல்முனை பிராந்திய தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.