• Apr 26 2024

விபத்துக்கு பின் ரிஷப் பண்ட் முதல்முறையாக ட்வீட்.. என்ன சொல்லிருக்கார் பாருங்க!

Chithra / Jan 17th 2023, 8:37 am
image

Advertisement

இந்திய அணியின் கிரிக்கெட் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி  பயங்கரமான வாகன விபத்தில் சிக்கி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை அவர் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவருக்கு முழங்காலில் உள்ள கிழிந்த தசைநார்கள் சரிசெய்ய இரண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப்பட்டது. 

தற்போது அவர் காயங்களில் இருந்து மீண்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


டெஹ்ராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பண்ட், தற்போது மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் உரையாடும் அளவுக்குத் அவரது உடலை நிலை தேறியுள்ளது.

விபத்துக்குப் பிறகு தீப்பற்றி எரிந்த மகிழுந்திலிருந்து தன்னை வெளியே இழுத்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களான ரஜத் குமார் மற்றும் நிஷு குமார் ஆகிய இருவருக்கு ரிஷப் பண்ட நன்றி தெரிவித்தார்.


ரஜத் குமார் மற்றும் நிஷு குமார் ஆகிய இருவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பண்ட் ட்விட்டரில் ஒரு இதயப்பூர்வமான பதிவை இட்டுள்ளார்.

அத்துடன், அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் தன்னை சந்திக்கும் படத்தையும் பண்ட் வெளியிட்டுள்ளார்.

அதில் ரஜத் மற்றும் நிஷுவை  ‘ஹீரோக்கள் என்று குறிப்பிட்டுள்ள ரிஷப் பண்ட், அவர்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றும் கூறினார்.

மகிழுந்திலிருந்து வெளியே வர உதவியது மட்டுமின்றி வைத்தியசாலைக்கு தன்னை பாதுகாப்பாக கொண்டுசெல்வதை உறுதி செய்ததற்காகவும் இருவருக்கும் பண்ட் தமது நன்றியை தெரிவித்தார்.

“அனைவருக்கும் தனித்தனியாக என்னால் நன்றி சொல்ல முடியாமல் போயிருக்கலாம், ஆனால் விபத்தின் போது எனக்கு உதவிய இந்த இரண்டு ஹீரோக்களையும் நான் பாராட்ட வேண்டும். நான் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு வந்தேன். ரஜத் குமார் மற்றும் நிஷு குமாருக்கு நன்றி. நான் என்றென்றும் நன்றியுடையவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருப்பேன்” என்று பண்ட் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்கு பின் ரிஷப் பண்ட் முதல்முறையாக ட்வீட். என்ன சொல்லிருக்கார் பாருங்க இந்திய அணியின் கிரிக்கெட் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி  பயங்கரமான வாகன விபத்தில் சிக்கி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை அவர் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.அவருக்கு முழங்காலில் உள்ள கிழிந்த தசைநார்கள் சரிசெய்ய இரண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் காயங்களில் இருந்து மீண்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.டெஹ்ராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பண்ட், தற்போது மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் உரையாடும் அளவுக்குத் அவரது உடலை நிலை தேறியுள்ளது.விபத்துக்குப் பிறகு தீப்பற்றி எரிந்த மகிழுந்திலிருந்து தன்னை வெளியே இழுத்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களான ரஜத் குமார் மற்றும் நிஷு குமார் ஆகிய இருவருக்கு ரிஷப் பண்ட நன்றி தெரிவித்தார்.ரஜத் குமார் மற்றும் நிஷு குமார் ஆகிய இருவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பண்ட் ட்விட்டரில் ஒரு இதயப்பூர்வமான பதிவை இட்டுள்ளார்.அத்துடன், அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் தன்னை சந்திக்கும் படத்தையும் பண்ட் வெளியிட்டுள்ளார்.அதில் ரஜத் மற்றும் நிஷுவை  ‘ஹீரோக்கள் என்று குறிப்பிட்டுள்ள ரிஷப் பண்ட், அவர்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றும் கூறினார்.மகிழுந்திலிருந்து வெளியே வர உதவியது மட்டுமின்றி வைத்தியசாலைக்கு தன்னை பாதுகாப்பாக கொண்டுசெல்வதை உறுதி செய்ததற்காகவும் இருவருக்கும் பண்ட் தமது நன்றியை தெரிவித்தார்.“அனைவருக்கும் தனித்தனியாக என்னால் நன்றி சொல்ல முடியாமல் போயிருக்கலாம், ஆனால் விபத்தின் போது எனக்கு உதவிய இந்த இரண்டு ஹீரோக்களையும் நான் பாராட்ட வேண்டும். நான் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு வந்தேன். ரஜத் குமார் மற்றும் நிஷு குமாருக்கு நன்றி. நான் என்றென்றும் நன்றியுடையவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருப்பேன்” என்று பண்ட் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement