• Jul 05 2024

மேல், வட மாகாணங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம்..! 10 மரணங்கள் பதிவு

Chithra / Jul 3rd 2024, 9:33 am
image

Advertisement


மேல் மற்றும் வடமாகாணங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 28,239 டெங்கு நோயார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 6,344 டெங்கு நோயாளர்களும், 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3,974 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில்  2,820 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 10 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல், வட மாகாணங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம். 10 மரணங்கள் பதிவு மேல் மற்றும் வடமாகாணங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இவ்வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 28,239 டெங்கு நோயார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 6,344 டெங்கு நோயாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3,974 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில்  2,820 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 10 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement