• Dec 09 2024

சம்மாந்துறையில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிளால் பரபரப்பு...!

Sharmi / Jul 3rd 2024, 9:26 am
image

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் பஜாஜ் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் வழிகாட்டலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஷ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.

அத்துடன் மீட்கப்பட்டுள்ள EP XJ 1724 என்ற இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் வேறு பகுதியில் இடத்தில் இருந்து ஏதேனும் குற்றச் செயலுக்கு கொண்டுவரப்பட்டதா அல்லது களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளா என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


சம்மாந்துறையில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிளால் பரபரப்பு. சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் பஜாஜ் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் வழிகாட்டலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஷ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.அத்துடன் மீட்கப்பட்டுள்ள EP XJ 1724 என்ற இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த மோட்டார் சைக்கிள் வேறு பகுதியில் இடத்தில் இருந்து ஏதேனும் குற்றச் செயலுக்கு கொண்டுவரப்பட்டதா அல்லது களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளா என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement