இலங்கையில் தொற்றா நோய்கள் மற்றும் அவற்றினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து, அடையாளம் காண அடுத்த வருடம் கணக்கெடுப்பொன்று நடத்தப்படவுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரக்கோன் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக 2021ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது நாட்டில் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே மீண்டும் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சமிந்தி சமரக்கோன் தெரிவித்தார்.
இலங்கையில் தொற்றா நோய்களால் ஏற்படும் ஆபத்துகள் - அடையாளம் காண கணக்கெடுப்பு இலங்கையில் தொற்றா நோய்கள் மற்றும் அவற்றினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து, அடையாளம் காண அடுத்த வருடம் கணக்கெடுப்பொன்று நடத்தப்படவுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரக்கோன் இதனைத் தெரிவித்தார். முன்னதாக 2021ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது நாட்டில் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சமிந்தி சமரக்கோன் தெரிவித்தார்.