• May 19 2024

இலங்கையில் அதிகரித்த வீதி விபத்துக்கள் - நான்கு மாதங்களில் உச்சம் தொட்ட பலிகள்! samugammedia

Chithra / Jun 13th 2023, 11:32 am
image

Advertisement

இலங்கையில் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தொிவித்துள்ளாா்.

இதில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் பதிவாகியுள்ளதாக அவா் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் நடந்துள்ளன.

இந்த விபத்துகளில் 709 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் குறிப்பாக 667 பேர் ஸ்தலத்திலேயே உயிாிழந்தனா்

உயிாிந்தவா்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனா்களே அதிகளவில் அடங்கியுள்ளனா்.

உயிாிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஆவதுடன் 102 பேர் பயணிகள் ஆவா். அத்துடன் 179 பாதசாரிகளும் மரணித்துள்ளனா்.

இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை மோட்டாா் சைக்கிள்களால் ஏற்படுகின்றன

இரண்டாவது அதிக விபத்துக்கள் முச்சக்கர வண்டிகளால் ஏற்படுகின்றன.

இதனால் வீதியில் நிகழும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் இடம்பெற்றுள்ளவை என தொியவந்துள்ளது.

எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும் என நிஹால் தல்துவ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அதிகரித்த வீதி விபத்துக்கள் - நான்கு மாதங்களில் உச்சம் தொட்ட பலிகள் samugammedia இலங்கையில் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தொிவித்துள்ளாா்.இதில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் பதிவாகியுள்ளதாக அவா் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் நடந்துள்ளன.இந்த விபத்துகளில் 709 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் குறிப்பாக 667 பேர் ஸ்தலத்திலேயே உயிாிழந்தனா்உயிாிந்தவா்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனா்களே அதிகளவில் அடங்கியுள்ளனா்.உயிாிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஆவதுடன் 102 பேர் பயணிகள் ஆவா். அத்துடன் 179 பாதசாரிகளும் மரணித்துள்ளனா்.இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை மோட்டாா் சைக்கிள்களால் ஏற்படுகின்றனஇரண்டாவது அதிக விபத்துக்கள் முச்சக்கர வண்டிகளால் ஏற்படுகின்றன.இதனால் வீதியில் நிகழும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் இடம்பெற்றுள்ளவை என தொியவந்துள்ளது.எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும் என நிஹால் தல்துவ வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement