• Feb 07 2025

அரச பணத்தை வீணாக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை - மன்னார் மக்கள் விசனம்

Chithra / Feb 7th 2025, 2:44 pm
image

 


மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான செளத்பார் புகையிரத நிலைய வீதி பல வருடங்களாக ஒழுங்கான பராமறிப்பின்றி சேதமடைந்து காணப்படுகின்றமை தொடர்பில் மக்கள் பல்வேறு குற்றசாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்

முன்னதாகவே குறித்த வீதியை புணரமைப்பு செய்வதற்கான நிதி ஒதிக்கீடு செய்யப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் வீதி அபிவிருத்தி பணிகள் இடம் பெறாத நிலையில் ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பி சென்றது

இந்த நிலையில் புகையிரத பயணங்களுக்குக்காக செல்லும் பொது மக்கள் உட்பட சாந்திபுரம், செளத்பார் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த வீதியை ஒழுங்கான முறையில் பயன்படுத்த முடியாத நிலையில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்

இவ்வாறான பின்னனியில் அவ் அப்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் செய்யப்படும் சீராக்கும் பணிகளும் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

இவ்வாறான நிலையில் பயன்படுத்த முடியாத வீதியை சீராக்கல் என்ற பெயரில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அரச பணத்தை வீணக்குவதை விடுத்து வீதியை முழுமையாக புணரமைத்து தருமாறு அப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்


அரச பணத்தை வீணாக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை - மன்னார் மக்கள் விசனம்  மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான செளத்பார் புகையிரத நிலைய வீதி பல வருடங்களாக ஒழுங்கான பராமறிப்பின்றி சேதமடைந்து காணப்படுகின்றமை தொடர்பில் மக்கள் பல்வேறு குற்றசாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்முன்னதாகவே குறித்த வீதியை புணரமைப்பு செய்வதற்கான நிதி ஒதிக்கீடு செய்யப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் வீதி அபிவிருத்தி பணிகள் இடம் பெறாத நிலையில் ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பி சென்றதுஇந்த நிலையில் புகையிரத பயணங்களுக்குக்காக செல்லும் பொது மக்கள் உட்பட சாந்திபுரம், செளத்பார் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த வீதியை ஒழுங்கான முறையில் பயன்படுத்த முடியாத நிலையில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்இவ்வாறான பின்னனியில் அவ் அப்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் செய்யப்படும் சீராக்கும் பணிகளும் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்இவ்வாறான நிலையில் பயன்படுத்த முடியாத வீதியை சீராக்கல் என்ற பெயரில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அரச பணத்தை வீணக்குவதை விடுத்து வீதியை முழுமையாக புணரமைத்து தருமாறு அப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement