இலங்கையில் இந்த வருடம் 111 துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கிறது. 50 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 59பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் அதனைக் கண்டு பிடிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்களை ஒதுக்குவதை நிறுத்துவதாக அதிபர் பல தடவைகள் தெரிவித்திருக்கிறார். அது நல்ல விடயம் அதனை செய்யுங்கள். அதேநேரம் காணி உரிமையை வழங்குங்கள்.
மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி உரிமையை வழங்குவதை ஆளும் கட்சி எதிர்க்கட்சி யாரும் எதிர்க்கப்போவதில்லை. தமிழ் மக்களைவிட சிங்கள மக்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறனர்.
எமது மக்களுக்கு பிரஜா உரிமை இருக்கின்றபோதும் அது பூரணமாக இல்லை. அதனை பூரணப்படுத்தி தோட்ட மக்களை தேசிய நீராேட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். அதிபர் சொன்னதை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் வெள்ளவத்தையில் பெண்களின் தங்க சங்கிலிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அதற்கு தேவையான தகவல்கள் காவல்துறையினருக்கு வழங்கப்படுகின்ற தகவல்கள் ஊடாகத்தான் செல்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
அதனால் காவல்துறையினருக்கு காவல்துறையினரின் வேலையை செய்யவிடுங்கள் கிராம சேவகர்களுக்கு அவர்களின் வேலையை செய்ய விடுங்கள்.
கொழும்பில் தமிழ் மக்களின் வீடுகளில் காவல்துறையினர் பதிவு செய்வது தொடர்பில் தெரிவித்தபோது அமைச்சர் டிரான் அலஸ், நான் பொய் கூறுவதாக தெரிவித்தார். ஆனால் அவர் தெரிவித்தது அனைத்தும் பொய் என்றே நான் சொல்வது.
அதனால் காவல்துறையினர் கொழும்பில் வீடு வீடாகச்சென்று வழங்கப்படும் சிங்கள மொழியில் மாத்திரமான விண்ணப்ப படிவத்தை நான் சபைக்கு சமர்ப்பிக்கிறேன். அரசியல் அமைப்பின் பிரகாரம் 3 மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். இதனை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
வெள்ளவத்தையில் நடக்கும் கொள்ளைகள்: பின்னணியில் காவல்துறையினரா. மனோ சந்தேகம் இலங்கையில் இந்த வருடம் 111 துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கிறது. 50 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 59பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் அதனைக் கண்டு பிடிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.இதுதொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவிக்கையில்,மலையக மக்களை ஒதுக்குவதை நிறுத்துவதாக அதிபர் பல தடவைகள் தெரிவித்திருக்கிறார். அது நல்ல விடயம் அதனை செய்யுங்கள். அதேநேரம் காணி உரிமையை வழங்குங்கள். மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி உரிமையை வழங்குவதை ஆளும் கட்சி எதிர்க்கட்சி யாரும் எதிர்க்கப்போவதில்லை. தமிழ் மக்களைவிட சிங்கள மக்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறனர்.எமது மக்களுக்கு பிரஜா உரிமை இருக்கின்றபோதும் அது பூரணமாக இல்லை. அதனை பூரணப்படுத்தி தோட்ட மக்களை தேசிய நீராேட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். அதிபர் சொன்னதை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.அத்துடன் வெள்ளவத்தையில் பெண்களின் தங்க சங்கிலிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அதற்கு தேவையான தகவல்கள் காவல்துறையினருக்கு வழங்கப்படுகின்ற தகவல்கள் ஊடாகத்தான் செல்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் காவல்துறையினருக்கு காவல்துறையினரின் வேலையை செய்யவிடுங்கள் கிராம சேவகர்களுக்கு அவர்களின் வேலையை செய்ய விடுங்கள்.கொழும்பில் தமிழ் மக்களின் வீடுகளில் காவல்துறையினர் பதிவு செய்வது தொடர்பில் தெரிவித்தபோது அமைச்சர் டிரான் அலஸ், நான் பொய் கூறுவதாக தெரிவித்தார். ஆனால் அவர் தெரிவித்தது அனைத்தும் பொய் என்றே நான் சொல்வது.அதனால் காவல்துறையினர் கொழும்பில் வீடு வீடாகச்சென்று வழங்கப்படும் சிங்கள மொழியில் மாத்திரமான விண்ணப்ப படிவத்தை நான் சபைக்கு சமர்ப்பிக்கிறேன். அரசியல் அமைப்பின் பிரகாரம் 3 மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். இதனை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.