• Apr 07 2025

சஜித் கட்சியின் வேட்பாளர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை

Chithra / Apr 7th 2025, 11:25 am
image

  

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அதுருகிரிய - பொரலுகொட வீதியில் உள்ள வேட்பாளரின் வீட்டிலேயே இவ்வாறு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

ஒப்பந்ததாரராக பணிபுரியும் குறித்த நபர் வீட்டிற்குள், பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள் நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி  பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு வந்த கொள்ளையர்கள்  180,000 ரூபா  பணம் இருந்த பணப்பை  மற்றும்  85,000 ரூபா  மதிப்புள்ள இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


சஜித் கட்சியின் வேட்பாளர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை   ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.அதுருகிரிய - பொரலுகொட வீதியில் உள்ள வேட்பாளரின் வீட்டிலேயே இவ்வாறு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.  ஒப்பந்ததாரராக பணிபுரியும் குறித்த நபர் வீட்டிற்குள், பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள் நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி  பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.அங்கு வந்த கொள்ளையர்கள்  180,000 ரூபா  பணம் இருந்த பணப்பை  மற்றும்  85,000 ரூபா  மதிப்புள்ள இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement