• Nov 17 2024

வங்கிக்குள் மூன்று நாட்கள் பதுங்கியிருந்து கொள்ளை - இலங்கையில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம்

Chithra / May 29th 2024, 9:02 am
image

 

ஜால பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கியொன்றை உடைத்து மூன்று நாட்கள் அங்கு இரகசியமான தங்கியிருந்து பணம் மற்றும் தங்கத்தை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வங்கி விடுமுறையின் போது சந்தேக நபர் சுவரை உடைத்து வங்கிக்குள் பிரவேசித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அங்கு சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் மற்றும் பத்து லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் திருடப்பட்டதுடன், வங்கியின் சிசிடிவி கமரா அமைப்பும் முற்றிலுமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்  வென்னப்பு பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றினுள் புகுந்து 06 கோடி பெறுமதியான தங்கம் மற்றும் நாடுமுழுவதும் உள்ள தபால் நிலையங்களின் பெட்டகங்களையும் இந்த நபர் திருடிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில், வங்கியில் திருடப்பட்ட சுமார் 500 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள், பெட்டகங்கள், சுத்தியல், அன்றைய தினம் அணிந்திருந்த ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

மேலும் சந்தேகநபர் திருட்டுக்கு பயன்படுத்திய சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வங்கிக்குள் மூன்று நாட்கள் பதுங்கியிருந்து கொள்ளை - இலங்கையில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம்  ஜால பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கியொன்றை உடைத்து மூன்று நாட்கள் அங்கு இரகசியமான தங்கியிருந்து பணம் மற்றும் தங்கத்தை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.வெசாக் பண்டிகையை முன்னிட்டு வங்கி விடுமுறையின் போது சந்தேக நபர் சுவரை உடைத்து வங்கிக்குள் பிரவேசித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அங்கு சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் மற்றும் பத்து லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் திருடப்பட்டதுடன், வங்கியின் சிசிடிவி கமரா அமைப்பும் முற்றிலுமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும்  வென்னப்பு பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றினுள் புகுந்து 06 கோடி பெறுமதியான தங்கம் மற்றும் நாடுமுழுவதும் உள்ள தபால் நிலையங்களின் பெட்டகங்களையும் இந்த நபர் திருடிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில், வங்கியில் திருடப்பட்ட சுமார் 500 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள், பெட்டகங்கள், சுத்தியல், அன்றைய தினம் அணிந்திருந்த ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.மேலும் சந்தேகநபர் திருட்டுக்கு பயன்படுத்திய சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement