• May 17 2024

ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம்: ஆளும் தரப்பு வெட்கப்பட வேண்டும் - எதிர்க்கட்சி எம்.பி ஆவேசம்..! samugammedia

Chithra / Nov 28th 2023, 10:43 am
image

Advertisement

ரொஷான் ரணசிங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதையிட்டு ஆளும் தரப்பு உறுப்பினர்களும் வெட்கப்பட வேண்டும். சம்மி, சாகல பற்றி பேசினால் செய்வதென்ன என்பதை ஜனாதிபதி காண்பித்துள்ளார்  என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். 

படவிளக்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊழலை இல்லாதொழப்பதாக சர்வதேசத்திற்கு குறிப்பிட்டுக் கொண்டு  ஊழல்வாதிகளை பாதுகாக்கிறார், ஊழலை வெளிப்படுத்துபவர்களை புறக்கணிக்கிறார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வந்த விளையாட்டுத்துறை, நீர்பாசனம் மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர்  ரொஷான் ரணசிங்கவை ஒரு கடிதத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கியுள்ளார்.

ரொஷான் ரணசிங்கவை பதவி நீக்கியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைந்து கைத்தட்ட முடியாது. ஆளும் தரப்பு  வெட்கப்பட வேண்டும். 

உகண்டா நாட்டின் முன்னாள் அதிபர் இடி அமீன் நாட்டு மக்களை சூறையாடி தம்மை வளப்படுத்தினார். அதே போல் தான் இந்த ராஜபக்ஷர்களும் நாட்டை சூறையாடி ஒட்டுமொத்த மக்களையும் வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்கள்.

ரொஷான் ரணசிங்க ராஜபக்ஷர்களுக்கு சார்பாகவே செயற்பட்டார்.  

ராஜபக்ஷர்களுக்காகவே  ரொஷான் ரணசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். 

ஆனால் இன்று ரொஷான் ரணசிங்கவை ராஜபக்ஷர்கள் எவரும் பாதுகாக்கவில்லை, அவருக்காக குரல் கொடுக்கவுமில்லை.  என்றார்.

ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம்: ஆளும் தரப்பு வெட்கப்பட வேண்டும் - எதிர்க்கட்சி எம்.பி ஆவேசம். samugammedia ரொஷான் ரணசிங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதையிட்டு ஆளும் தரப்பு உறுப்பினர்களும் வெட்கப்பட வேண்டும். சம்மி, சாகல பற்றி பேசினால் செய்வதென்ன என்பதை ஜனாதிபதி காண்பித்துள்ளார்  என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். படவிளக்கம்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊழலை இல்லாதொழப்பதாக சர்வதேசத்திற்கு குறிப்பிட்டுக் கொண்டு  ஊழல்வாதிகளை பாதுகாக்கிறார், ஊழலை வெளிப்படுத்துபவர்களை புறக்கணிக்கிறார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வந்த விளையாட்டுத்துறை, நீர்பாசனம் மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர்  ரொஷான் ரணசிங்கவை ஒரு கடிதத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கியுள்ளார்.ரொஷான் ரணசிங்கவை பதவி நீக்கியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைந்து கைத்தட்ட முடியாது. ஆளும் தரப்பு  வெட்கப்பட வேண்டும். உகண்டா நாட்டின் முன்னாள் அதிபர் இடி அமீன் நாட்டு மக்களை சூறையாடி தம்மை வளப்படுத்தினார். அதே போல் தான் இந்த ராஜபக்ஷர்களும் நாட்டை சூறையாடி ஒட்டுமொத்த மக்களையும் வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்கள்.ரொஷான் ரணசிங்க ராஜபக்ஷர்களுக்கு சார்பாகவே செயற்பட்டார்.  ராஜபக்ஷர்களுக்காகவே  ரொஷான் ரணசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். ஆனால் இன்று ரொஷான் ரணசிங்கவை ராஜபக்ஷர்கள் எவரும் பாதுகாக்கவில்லை, அவருக்காக குரல் கொடுக்கவுமில்லை.  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement