• Apr 26 2024

ரோசி சேனாநாயக்கவுக்கு புதிய பதவி அறிவிப்பு..! samugammedia

Chithra / May 26th 2023, 1:21 pm
image

Advertisement

உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநகரசபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், ரோசி சேனாநாயக்க தனது பதவியிலிருந்து விலகினார்.

ரோசி சேனாநாயக்க , 2001-2004 வரை மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக பதவி வகித்துள்ளார். மேலும், 2009-2010 வரை மேல் மாகாண சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 

2015ஆம் ஆண்டு குழந்தைகள் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்த அவர், பிரதமரின் செய்தித் தொடர்பாளராகவும், பிரதமர் அலுவலகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அவரை  மீண்டும் மேயர் பதவிக்கு போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரிய போதிலும், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா நியமிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. அத்துடன் அவர் இந்த தீர்மானத்தில் சற்று தயக்கம் காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டது.

இவ்வாறான நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை நியமிக்க ஜலானி பிரேமதாசவின் ஆதரவுடன் சிலர் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், ரோசி சேனாநாயக்க உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் கொழும்பு மேயர்  நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோசி சேனாநாயக்கவுக்கு புதிய பதவி அறிவிப்பு. samugammedia உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.மாநகரசபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், ரோசி சேனாநாயக்க தனது பதவியிலிருந்து விலகினார்.ரோசி சேனாநாயக்க , 2001-2004 வரை மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக பதவி வகித்துள்ளார். மேலும், 2009-2010 வரை மேல் மாகாண சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 2015ஆம் ஆண்டு குழந்தைகள் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்த அவர், பிரதமரின் செய்தித் தொடர்பாளராகவும், பிரதமர் அலுவலகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.அவரை  மீண்டும் மேயர் பதவிக்கு போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரிய போதிலும், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா நியமிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. அத்துடன் அவர் இந்த தீர்மானத்தில் சற்று தயக்கம் காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டது.இவ்வாறான நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை நியமிக்க ஜலானி பிரேமதாசவின் ஆதரவுடன் சிலர் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், ரோசி சேனாநாயக்க உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் கொழும்பு மேயர்  நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement