• Apr 01 2025

அரசியலில் உட்பிரவேசிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து யாழில் வட்டமேசை கலந்துரையாடல்..!

Sharmi / Mar 27th 2025, 2:35 pm
image

அரசியலில் உட்பிரவேசிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் நுண்நிதி கடன்களை பெண்கள் பெற்றுக் கொள்வதினால் ஏற்படுகின்ற தாக்கங்கள் தொடர்பாகவும் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற போதைப்பொருள் பாவனையால் சமூக மட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் ஏற்படுகின்ற வன்முறை மற்றும் தற்கால சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனைகள தொடர்பாக விழுது நிறுவனம் மற்றும் ஜேர்மனிய அபிவிருத்தி கூட்டு தாபனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த வட்டமேசைக் கலந்துரையாடலானது விழுது நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட அதிகாரி இந்துமதி ஹரிஹர தாமோதரன் தலைமையில் யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திருமண மண்டபமொன்றில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளர் சசீலன் இராஜேந்திரா, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி ஆர். சுரேந்திரகுமாரன், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், அமரா பெண் தலைமைத்துவ குடும்ப் பெண்கள் யாழ் மாவட்ட சமாச அங்கத்தவர்கள் போன்றவர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர். 

குறித்த கலந்துரையாடலில் அரசியலில் பெண்களின் உட்பிரவேசம், நுண் நிதிக் கடன், நிலையான பொருளாதாரம், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் போன்ற சமூக ரீதியாக அடையாளப்படுத்தப்பட்ட துனிப்பொருள் அடிப்படையாகக் கொண்டு குறித்த வட்டமேசை கலந்துரையாடலானது இடம்பெற்றிருந்தது. 

நிகழ்வில் தேர்தல் பிரச்சார காலங்களில் ஏற்படும் வன்முறைகளுக்கான தீர்வுகள் அதனை எவ்வாறான வழிமுறைகளின் மூலம் அணுகலாம், ஜனநாயகம் தொடர்பான அறிமுகப்படுத்தல், வாக்குரிமை பெறுநர் டாப்புக்களின் மீளாய்வு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பூர்த்தி செய்யப்பட வேண்டிய அடிப்படை தகுதிகள் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன்,  தற்பொழுது அரசியல் உட்பிரவேசித்துள்ள பெண் வேட்பாளர்கள் சமூக மட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தான பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளும் தொடர்புபட்ட உத்தியோகத்தர்கள் மூலம் வழங்கப்பட்டிருந்தது. 

தற்காலத்தில் இளைஞர்கள் முகங்கொடுத்து வருகின்ற போதைப்பொருள் பாவனை தொடர்பான பிரச்சினைகளுக்கான சமுதாயமட்ட பெண்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக தொடர்புப்பட்ட போதைப்பொருள் தடுப்பு மற்றும் முற்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூலம் அதனுடன் தொடர்புபட்ட பரிந்துரைகளும் முன்மொழியப்பட்டிருந்தது. சமுதாயத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளில் நுண்ணிதி கடன் மிக முதன்மையானது.

அவ்வாறு நுண்நிதி கடனால் பாதிக்கப்பட்டு வரும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான காரணங்கள் மற்றும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டிருந்தது.



அரசியலில் உட்பிரவேசிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து யாழில் வட்டமேசை கலந்துரையாடல். அரசியலில் உட்பிரவேசிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் நுண்நிதி கடன்களை பெண்கள் பெற்றுக் கொள்வதினால் ஏற்படுகின்ற தாக்கங்கள் தொடர்பாகவும் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற போதைப்பொருள் பாவனையால் சமூக மட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் ஏற்படுகின்ற வன்முறை மற்றும் தற்கால சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனைகள தொடர்பாக விழுது நிறுவனம் மற்றும் ஜேர்மனிய அபிவிருத்தி கூட்டு தாபனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த வட்டமேசைக் கலந்துரையாடலானது விழுது நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட அதிகாரி இந்துமதி ஹரிஹர தாமோதரன் தலைமையில் யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திருமண மண்டபமொன்றில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளர் சசீலன் இராஜேந்திரா, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி ஆர். சுரேந்திரகுமாரன், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், அமரா பெண் தலைமைத்துவ குடும்ப் பெண்கள் யாழ் மாவட்ட சமாச அங்கத்தவர்கள் போன்றவர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர். குறித்த கலந்துரையாடலில் அரசியலில் பெண்களின் உட்பிரவேசம், நுண் நிதிக் கடன், நிலையான பொருளாதாரம், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் போன்ற சமூக ரீதியாக அடையாளப்படுத்தப்பட்ட துனிப்பொருள் அடிப்படையாகக் கொண்டு குறித்த வட்டமேசை கலந்துரையாடலானது இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் தேர்தல் பிரச்சார காலங்களில் ஏற்படும் வன்முறைகளுக்கான தீர்வுகள் அதனை எவ்வாறான வழிமுறைகளின் மூலம் அணுகலாம், ஜனநாயகம் தொடர்பான அறிமுகப்படுத்தல், வாக்குரிமை பெறுநர் டாப்புக்களின் மீளாய்வு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பூர்த்தி செய்யப்பட வேண்டிய அடிப்படை தகுதிகள் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன்,  தற்பொழுது அரசியல் உட்பிரவேசித்துள்ள பெண் வேட்பாளர்கள் சமூக மட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தான பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளும் தொடர்புபட்ட உத்தியோகத்தர்கள் மூலம் வழங்கப்பட்டிருந்தது. தற்காலத்தில் இளைஞர்கள் முகங்கொடுத்து வருகின்ற போதைப்பொருள் பாவனை தொடர்பான பிரச்சினைகளுக்கான சமுதாயமட்ட பெண்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக தொடர்புப்பட்ட போதைப்பொருள் தடுப்பு மற்றும் முற்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூலம் அதனுடன் தொடர்புபட்ட பரிந்துரைகளும் முன்மொழியப்பட்டிருந்தது. சமுதாயத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளில் நுண்ணிதி கடன் மிக முதன்மையானது. அவ்வாறு நுண்நிதி கடனால் பாதிக்கப்பட்டு வரும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான காரணங்கள் மற்றும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement