• May 03 2024

சாய்ந்தமருத்துக்கு தொடர்ந்தும் 06 வட்டாரங்கள் இருக்க வேண்டும் : பிரதமருக்கு சிராஸ் அவசர கடிதம் !

Tamil nila / Dec 31st 2022, 3:32 pm
image

Advertisement

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் எல்லைகள் நிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசின் அடைப்படையில் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வட்டாரங்கள் எண்ணிக்கையை ஆறிலிருந்து நான்காக குறைத்துள்ளமையை ஏற்க முடியாது என்றும் சாய்ந்தமருதுக்கு தொடர்ந்தும் ஆறு வட்டாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார்.


பிரதமரும், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அக்கடிதத்தில் தொடர்ந்தும் அதிக வாக்காளர்களையும், அதிக சனத்தொகையையும் கொண்ட சாய்ந்தமருத்துக்கு 04 வட்டாரங்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 06 வட்டாரங்கள் தொடர்ந்தும் இருக்க வேண்டும். பொலிவேரியன் கிராமத்தை தனியான வட்டாரமாக பிரிக்கவேண்டிய தேவை உள்ள காலகட்டத்தில் இப்படி வட்டாரங்களை சுருங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.


கல்முனையில், 05 வட்டாரங்களும், இஸ்லாமாபாத்தை தனி வட்டரமாகவும் நிர்ணயித்துள்ளமை போன்று சாய்ந்தமருத்துக்கான வட்டாரங்களும் 06 ஆக இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருத்துக்கு தொடர்ந்தும் 06 வட்டாரங்கள் இருக்க வேண்டும் : பிரதமருக்கு சிராஸ் அவசர கடிதம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் எல்லைகள் நிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசின் அடைப்படையில் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வட்டாரங்கள் எண்ணிக்கையை ஆறிலிருந்து நான்காக குறைத்துள்ளமையை ஏற்க முடியாது என்றும் சாய்ந்தமருதுக்கு தொடர்ந்தும் ஆறு வட்டாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார்.பிரதமரும், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அக்கடிதத்தில் தொடர்ந்தும் அதிக வாக்காளர்களையும், அதிக சனத்தொகையையும் கொண்ட சாய்ந்தமருத்துக்கு 04 வட்டாரங்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 06 வட்டாரங்கள் தொடர்ந்தும் இருக்க வேண்டும். பொலிவேரியன் கிராமத்தை தனியான வட்டாரமாக பிரிக்கவேண்டிய தேவை உள்ள காலகட்டத்தில் இப்படி வட்டாரங்களை சுருங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.கல்முனையில், 05 வட்டாரங்களும், இஸ்லாமாபாத்தை தனி வட்டரமாகவும் நிர்ணயித்துள்ளமை போன்று சாய்ந்தமருத்துக்கான வட்டாரங்களும் 06 ஆக இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement