• Sep 08 2024

அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை குறைக்க வவுனியாவில் விசேட நடவடிக்கை!

Sharmi / Dec 31st 2022, 3:31 pm
image

Advertisement

அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை குறைக்கும் முகமாக வவுனியா பொலிசாரினால் வாகனங்களுக்கு விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

விபத்துக்களை குறைக்கும் முகமாக வவுனியா பொலிசாரினால் விழிப்புணர்வூட்டல், வீதிக் குறியீடுகளை மறுசீரமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக கனரக வாகனங்கள், பாரவூர்திகள் மற்றும் துவிச்சக்கரவண்டி போன்றவற்றிற்கு மின்னொளி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே அவர்களின் திட்டமிடலில் சீன அரச கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் போது வீதியால் சென்ற அனைத்து வாகனங்களும் வழிமறிக்கப்பட்டு அவற்றுக்கு இவ் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இடம்பெற்ற இவ் நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், சீன அரச கூட்டுத்தாபனத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை குறைக்க வவுனியாவில் விசேட நடவடிக்கை அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை குறைக்கும் முகமாக வவுனியா பொலிசாரினால் வாகனங்களுக்கு விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.விபத்துக்களை குறைக்கும் முகமாக வவுனியா பொலிசாரினால் விழிப்புணர்வூட்டல், வீதிக் குறியீடுகளை மறுசீரமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக கனரக வாகனங்கள், பாரவூர்திகள் மற்றும் துவிச்சக்கரவண்டி போன்றவற்றிற்கு மின்னொளி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே அவர்களின் திட்டமிடலில் சீன அரச கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் போது வீதியால் சென்ற அனைத்து வாகனங்களும் வழிமறிக்கப்பட்டு அவற்றுக்கு இவ் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இடம்பெற்ற இவ் நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், சீன அரச கூட்டுத்தாபனத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement