சாய்ந்தமருது - தோணா பாலம் உடைந்து விழும் ஆபத்தில் உள்ளதால் செப்பனிட்டு அழகு படுத்துவது பெரும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தற்போது சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள மிக பழமையான தோணா பாலத்தினை சிறு திருத்தங்கள் மாத்திரம் செய்து அழகுபடுத்த முயற்சிக்கும் செயற்பாட்டை பொதுமக்கள் கண்டித்துள்ளதுடன் குறித்த பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள அபாயகரமான நிலைமையையும் தெளிவுபடுத்தினர்.
இப்பாலத்தின் ஊடாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொழில் நிமர்த்தம் காரணமாக அதிக பயணங்கங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக அதிக கனரக வாகனங்கள் பயணிப்பதால் தற்போது இந்தப்பாலம் பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.
மேலும் கடந்த 2004ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவிலும் குறித்த பாலம் பாதிப்படைந்ததுடன் தற்போது உடைந்து விழும் நிலையில் உள்ளது.
இன் நிலையில் பாலத்தின் பாதுகாப்பிற்காக உள்ள மேல் தூண்களை மாத்திரமே அகற்றி அழகுபடுத்துவதால் எதிர்காலத்தில் பாரிய ஆபத்துகள் இடம்பெறும் என சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உடைந்து விழும் ஆபத்தில் சாய்ந்தமருது தோணா பாலம் - மக்கள் விடுத்துள்ள கோரிக்கை சாய்ந்தமருது - தோணா பாலம் உடைந்து விழும் ஆபத்தில் உள்ளதால் செப்பனிட்டு அழகு படுத்துவது பெரும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.தற்போது சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள மிக பழமையான தோணா பாலத்தினை சிறு திருத்தங்கள் மாத்திரம் செய்து அழகுபடுத்த முயற்சிக்கும் செயற்பாட்டை பொதுமக்கள் கண்டித்துள்ளதுடன் குறித்த பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள அபாயகரமான நிலைமையையும் தெளிவுபடுத்தினர்.இப்பாலத்தின் ஊடாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொழில் நிமர்த்தம் காரணமாக அதிக பயணங்கங்களை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக அதிக கனரக வாகனங்கள் பயணிப்பதால் தற்போது இந்தப்பாலம் பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.மேலும் கடந்த 2004ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவிலும் குறித்த பாலம் பாதிப்படைந்ததுடன் தற்போது உடைந்து விழும் நிலையில் உள்ளது.இன் நிலையில் பாலத்தின் பாதுகாப்பிற்காக உள்ள மேல் தூண்களை மாத்திரமே அகற்றி அழகுபடுத்துவதால் எதிர்காலத்தில் பாரிய ஆபத்துகள் இடம்பெறும் என சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.