• Feb 10 2025

நீரில் மூழ்கி இருவர் பலி - இலங்கையில் சம்பவம்

Chithra / Feb 9th 2025, 12:08 pm
image

 

கஹவத்தை மற்றும் முந்தல் பகுதிகளில் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கஹவத்தை, வெலேகேபொல பகுதியில் உள்ள கல்பில்ல அமுன பகுதியில் உள்ள அணையில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொடகவெல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் மது அருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, முந்தல் கருங்காலிச்சோலை குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் முந்தலம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

நீரில் மூழ்கி இருவர் பலி - இலங்கையில் சம்பவம்  கஹவத்தை மற்றும் முந்தல் பகுதிகளில் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.கஹவத்தை, வெலேகேபொல பகுதியில் உள்ள கல்பில்ல அமுன பகுதியில் உள்ள அணையில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் கொடகவெல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர் மது அருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, முந்தல் கருங்காலிச்சோலை குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் முந்தலம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement