கல்கிசை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், மூத்த பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மேலும், குறித்த கான்ஸ்டபிள் நேற்று (08) இரவு வீதி சோதனை நடவடிக்கைக்காக சென்றபோது மேற்படி துப்பாக்கியையும் 30 தோட்டாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரி வீதி சோதனை நடவடிக்கைக்கு சமூகமளிக்காததால், அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது கையடக்க தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு சென்றுள்ளமை தெரியவந்தது.
அதன்படி, சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரியை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு சர்வதேச பொலிஸ் மூலம் தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் வைத்திருந்த துப்பாக்கி இன்னும் மீட்கப்படவில்லை, மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டை விட்டு தப்பியோடிய பொலிஸ் உத்தியோகத்தர் - மாயமான துப்பாக்கி கல்கிசை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், மூத்த பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார். மேலும், குறித்த கான்ஸ்டபிள் நேற்று (08) இரவு வீதி சோதனை நடவடிக்கைக்காக சென்றபோது மேற்படி துப்பாக்கியையும் 30 தோட்டாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரி வீதி சோதனை நடவடிக்கைக்கு சமூகமளிக்காததால், அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது கையடக்க தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளது.பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு சென்றுள்ளமை தெரியவந்தது.அதன்படி, சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரியை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு சர்வதேச பொலிஸ் மூலம் தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.அவர் வைத்திருந்த துப்பாக்கி இன்னும் மீட்கப்படவில்லை, மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.