• Apr 27 2024

சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்த சஜித், அநுர, மைத்திரி, டலஸ், மனோ அணிகள்!

Tamil nila / Jan 27th 2023, 8:56 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று  மாலை நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தை பிரதான அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்படி சந்திப்பில் பங்கேற்றிருந்தாலும் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் என்பன பங்கேற்கவில்லை.


அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.


எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தர லங்கா சபாகய, சுதந்திர மக்கள் சபை, தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன சர்வக்கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தன.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அரச ஆதரவு கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.


சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்த சஜித், அநுர, மைத்திரி, டலஸ், மனோ அணிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று  மாலை நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தை பிரதான அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்படி சந்திப்பில் பங்கேற்றிருந்தாலும் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் என்பன பங்கேற்கவில்லை.அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தர லங்கா சபாகய, சுதந்திர மக்கள் சபை, தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன சர்வக்கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தன.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அரச ஆதரவு கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement