• Sep 20 2024

இனவாதம் மதவாத்தில் குளிர் காய்பவர்கள் - அரசியல் வாதிகளே – சஜித் சுட்டிக்காட்டு!

Tamil nila / Jan 7th 2023, 6:00 pm
image

Advertisement

பிறருடைய மதங்களையும் அவர்களின் நம்பிக்கைகளையும் புண்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


பிரபஞ்சம் வேலைத்திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


எவருக்கும் மதத்தை நம்புவதற்கும் அவ்வாறு நம்பாதிருப்பதற்கும் உரிமை உண்டு என்றாலும், பிறருடைய நம்பிக்கைகளை புண்படுத்த எவருக்கும் உரிமையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இந்நாடு அனைத்து மதத்தினரும் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய நாடு என தெரிவித்த, எதிர்க்கட்சித் தலைவர், குறிப்பிட்ட சில புரட்சிக் கும்பல்களின் மதத்திற்கு எதிரான கருத்துக்களைக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.


புரட்சி பற்றி பேசும் தரப்பினர் தலதா மாளிகையையும் பௌத்த மதத்தையும் அவமதித்து பேசியதை வன்மையாக கண்டிப்பதாகவும், இவ்வாறானவர்களுக்கு சமூகத்தில் இடம் வழங்கக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.


மதம் மற்றும் இனங்களை அடிப்படையாக கொண்டு பிரிவினையை ஏற்படுத்த இங்கு இடமில்லை என்றும்

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் சகவாழ்வு நாட்டிற்கு இன்றியமையாதது எனவும், சகவாழ்வின் பிரகாரமே நாடு முன்னேற முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.


குறிப்பாக, இனவாததைப் பேசி பிளவுகளை ஏற்படுத்துவதனால் அரசியல்வாதிகளே வெற்றியடைவதாகவும், இதனால் நாட்டு மக்களுக்கும் நாடுமே தோல்வியைத் தழுவுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


இனவாதம் மதவாத்தில் குளிர் காய்பவர்கள் - அரசியல் வாதிகளே – சஜித் சுட்டிக்காட்டு பிறருடைய மதங்களையும் அவர்களின் நம்பிக்கைகளையும் புண்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.பிரபஞ்சம் வேலைத்திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.எவருக்கும் மதத்தை நம்புவதற்கும் அவ்வாறு நம்பாதிருப்பதற்கும் உரிமை உண்டு என்றாலும், பிறருடைய நம்பிக்கைகளை புண்படுத்த எவருக்கும் உரிமையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.இந்நாடு அனைத்து மதத்தினரும் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய நாடு என தெரிவித்த, எதிர்க்கட்சித் தலைவர், குறிப்பிட்ட சில புரட்சிக் கும்பல்களின் மதத்திற்கு எதிரான கருத்துக்களைக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.புரட்சி பற்றி பேசும் தரப்பினர் தலதா மாளிகையையும் பௌத்த மதத்தையும் அவமதித்து பேசியதை வன்மையாக கண்டிப்பதாகவும், இவ்வாறானவர்களுக்கு சமூகத்தில் இடம் வழங்கக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.மதம் மற்றும் இனங்களை அடிப்படையாக கொண்டு பிரிவினையை ஏற்படுத்த இங்கு இடமில்லை என்றும்நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் சகவாழ்வு நாட்டிற்கு இன்றியமையாதது எனவும், சகவாழ்வின் பிரகாரமே நாடு முன்னேற முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.குறிப்பாக, இனவாததைப் பேசி பிளவுகளை ஏற்படுத்துவதனால் அரசியல்வாதிகளே வெற்றியடைவதாகவும், இதனால் நாட்டு மக்களுக்கும் நாடுமே தோல்வியைத் தழுவுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement