• Nov 23 2024

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ஏப்ரல் மாதம் முதல் - வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு..!

Chithra / Mar 26th 2024, 7:26 am
image


2024 பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் 10,000 ரூபாய் வேதன அதிகரிப்பு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த தொகை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணமாக வழங்கப்படவுள்ள 10 கிலோ அரிசி, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஓய்வூதியக் கொடுப்பனவாக அதிகரிக்கப்பட்டுள்ள 2,500 ரூபாய் தொகை ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ஏப்ரல் மாதம் முதல் - வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு. 2024 பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் 10,000 ரூபாய் வேதன அதிகரிப்பு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இந்த தொகை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணமாக வழங்கப்படவுள்ள 10 கிலோ அரிசி, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஓய்வூதியக் கொடுப்பனவாக அதிகரிக்கப்பட்டுள்ள 2,500 ரூபாய் தொகை ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement