• May 20 2024

இலங்கையில் கலப்பட மிளகாய் தூள் விற்பனை அதிகரிப்பு..! மக்களுக்கு எச்சரிக்கை samugammedia

Chithra / Jun 18th 2023, 9:16 am
image

Advertisement

சந்தையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூளின் விற்பனை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கோதுமை மா, உப்புத்தூள் மற்றும் வர்ண தூள்கள் என்பன மிளகாய் தூளுடன் கலக்கப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார தெரிவித்தார்.

சந்தையில் ஒரு கிலோகிராம் மிளகாய் தூள் 1,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில், 40 சதவீதம் வரையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூள் சந்தையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சந்தையில் மிளகாய் தூளின் விலை அதிகரித்துள்ளமையினால், அதிக இலாபத்தை ஈட்டுவதற்காக வர்த்தகர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கு அமைய வர்ணம் சேர்க்கப்பட்ட கோதுமை மா, மிளகாய் தூளுடன் கலக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார தெரிவித்துள்ளார்.


இலங்கையில் கலப்பட மிளகாய் தூள் விற்பனை அதிகரிப்பு. மக்களுக்கு எச்சரிக்கை samugammedia சந்தையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூளின் விற்பனை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.கோதுமை மா, உப்புத்தூள் மற்றும் வர்ண தூள்கள் என்பன மிளகாய் தூளுடன் கலக்கப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார தெரிவித்தார்.சந்தையில் ஒரு கிலோகிராம் மிளகாய் தூள் 1,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்தநிலையில், 40 சதவீதம் வரையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூள் சந்தையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.சந்தையில் மிளகாய் தூளின் விலை அதிகரித்துள்ளமையினால், அதிக இலாபத்தை ஈட்டுவதற்காக வர்த்தகர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கு அமைய வர்ணம் சேர்க்கப்பட்ட கோதுமை மா, மிளகாய் தூளுடன் கலக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement