• Nov 28 2024

அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதற்காக பாடுபட்ட சம்பந்தன் - சபையில் சஜித் இரங்கல்...!

Anaath / Jul 2nd 2024, 12:22 pm
image

மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தனது இரங்கலினை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.   

இரா. சம்பந்தன்  ஒற்றுமை, ஐக்கியம், இலங்கை பிராந்திய ஒருமைப் பாட்டை பாதுகாத்தல் ஆகியவற்றில் திடசங்கற்பம் பூண்ட குரலாக ஒலித்தவர். 

எப்பொழுதும் தேசிய நல்லிணக்கத்தின் காப்பிற்காக பாடுபட்டவர், இனக்குழுமங்களின் ஒன்றிணைப்புக்காக பாடுபட்டவர், எல்லா பிரிவினை சேர்ந்த மக்களையும் ஒன்றிணைப்பதற்காக பாடுபட்டவர்.

இந்த சந்தர்ப்பத்திலே சம்பந்தனுடைய இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

இது தேசிய நல்லிணக்கத்துக்கு பெரும் இழப்பு என்று கூறிக்கொள்வதுடன் அவர் எப்பொழுதுமே முற்போக்கான தேசிய தலைவராக இருந்தார். 

அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களுக்காக பேசுகின்ற அதே வேளை இலங்கை வாதத்திற்காக குரல் கொடுத்தவர். அதை பற்றிப்பிடித்தவர். அவர் சாதிப்பாகுபாடுகளை பற்றிப்பிடித்தவர் அல்ல. இனத்துவ கொள்கைகளை பற்றி பிடித்தவர் அல்ல. 

இந்த சந்தர்ப்பத்தில் அவரின் இழப்பினையிட்டு ஆழ்ந்த அனுதாபத்தை அவரின் குடும்பத்து அனை த்து உறுப்பினர்களுக்கும்  தெரியப்படுத்துவதுடன் அனைவரும் அவர்  நாட்டுக்காக ஆற்றிய அளப்பெரிய சேவையினை நினைவு கூறுவோம். என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதற்காக பாடுபட்ட சம்பந்தன் - சபையில் சஜித் இரங்கல். மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தனது இரங்கலினை தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.   இரா. சம்பந்தன்  ஒற்றுமை, ஐக்கியம், இலங்கை பிராந்திய ஒருமைப் பாட்டை பாதுகாத்தல் ஆகியவற்றில் திடசங்கற்பம் பூண்ட குரலாக ஒலித்தவர். எப்பொழுதும் தேசிய நல்லிணக்கத்தின் காப்பிற்காக பாடுபட்டவர், இனக்குழுமங்களின் ஒன்றிணைப்புக்காக பாடுபட்டவர், எல்லா பிரிவினை சேர்ந்த மக்களையும் ஒன்றிணைப்பதற்காக பாடுபட்டவர்.இந்த சந்தர்ப்பத்திலே சம்பந்தனுடைய இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது தேசிய நல்லிணக்கத்துக்கு பெரும் இழப்பு என்று கூறிக்கொள்வதுடன் அவர் எப்பொழுதுமே முற்போக்கான தேசிய தலைவராக இருந்தார். அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களுக்காக பேசுகின்ற அதே வேளை இலங்கை வாதத்திற்காக குரல் கொடுத்தவர். அதை பற்றிப்பிடித்தவர். அவர் சாதிப்பாகுபாடுகளை பற்றிப்பிடித்தவர் அல்ல. இனத்துவ கொள்கைகளை பற்றி பிடித்தவர் அல்ல. இந்த சந்தர்ப்பத்தில் அவரின் இழப்பினையிட்டு ஆழ்ந்த அனுதாபத்தை அவரின் குடும்பத்து அனை த்து உறுப்பினர்களுக்கும்  தெரியப்படுத்துவதுடன் அனைவரும் அவர்  நாட்டுக்காக ஆற்றிய அளப்பெரிய சேவையினை நினைவு கூறுவோம். என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement