• Jun 26 2024

தமிழர்களுக்கு வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வை இந்தியா தரும் என சம்பந்தன் கனவு - வீரசேகர கிண்டல்! samugammedia

Tamil nila / Aug 6th 2023, 3:02 pm
image

Advertisement

"தமிழர்களுக்கு வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வை இந்தியா தரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கனவு காண்கின்றார்."

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அந்த ஒப்பந்தத்தை இனியும் தூக்கிப் பிடித்துக்கொண்டு துள்ளுவதில் எந்தப் பயனும் இல்லை.

தமிழர்களுக்கு இந்தியா ஒருபோதும் தீர்வை வழங்கமாட்டாது. ஆனால், தீர்வை இந்தியா வழங்கும் என்ற கனவுடன் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிறுபிள்ளைத்தனமாகக் கடிதம் எழுதுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.

வடக்கு - கிழக்கு இணைப்புக்கும், சமஷ்டித் தீர்வுக்கும் இங்கு ஒருபோதும் வாய்ப்பில்லை." - என்றார்.

தமிழர்களுக்கு வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வை இந்தியா தரும் என சம்பந்தன் கனவு - வீரசேகர கிண்டல் samugammedia "தமிழர்களுக்கு வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வை இந்தியா தரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கனவு காண்கின்றார்."இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,"இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அந்த ஒப்பந்தத்தை இனியும் தூக்கிப் பிடித்துக்கொண்டு துள்ளுவதில் எந்தப் பயனும் இல்லை.தமிழர்களுக்கு இந்தியா ஒருபோதும் தீர்வை வழங்கமாட்டாது. ஆனால், தீர்வை இந்தியா வழங்கும் என்ற கனவுடன் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிறுபிள்ளைத்தனமாகக் கடிதம் எழுதுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.வடக்கு - கிழக்கு இணைப்புக்கும், சமஷ்டித் தீர்வுக்கும் இங்கு ஒருபோதும் வாய்ப்பில்லை." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement