• Sep 20 2024

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களுக்கு ஜய்கா பாராட்டு SamugamMedia

Chithra / Feb 20th 2023, 6:55 pm
image

Advertisement


இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் சாதகமாக முன்னேறி வருவதாகவும், எதிர்காலத்தில் தமது வேலைத்திட்டங்கள் ஊடாக ஆதரவளிக்கப்படும் எனவும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (ஜய்கா - JICA) தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டெருயூகி இடோ (Teruyuki Ito) தெரிவித்தார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும், டெருயூகி இடோவுக்கும் இடையில் இன்று (20) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில், இந்நாட்டின் பொருளாதார நிலைமையை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வேலைத்திட்டம் தொடர்பில் மேலும் விளக்கமளித்தார்.

பல வருடங்களாக மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு தற்போது படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த மறுசீரமைப்புகள், சிரமமேயானாலும் மக்கள் தகவமைத்துக் கொண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின் மூலம் நாட்டின் பொருளாதார உறுதிப்பாடு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் கூறினார்.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களுக்கு ஜய்கா பாராட்டு SamugamMedia இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் சாதகமாக முன்னேறி வருவதாகவும், எதிர்காலத்தில் தமது வேலைத்திட்டங்கள் ஊடாக ஆதரவளிக்கப்படும் எனவும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (ஜய்கா - JICA) தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டெருயூகி இடோ (Teruyuki Ito) தெரிவித்தார்.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும், டெருயூகி இடோவுக்கும் இடையில் இன்று (20) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலில், இந்நாட்டின் பொருளாதார நிலைமையை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன்போது, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வேலைத்திட்டம் தொடர்பில் மேலும் விளக்கமளித்தார்.பல வருடங்களாக மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு தற்போது படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.இந்த மறுசீரமைப்புகள், சிரமமேயானாலும் மக்கள் தகவமைத்துக் கொண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின் மூலம் நாட்டின் பொருளாதார உறுதிப்பாடு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement