• Sep 19 2024

இலங்கையில் டைல், சானிட்டரி பொருட்கள் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் samugammedia

Chithra / May 24th 2023, 11:37 am
image

Advertisement

இலங்கையில் டைல் மற்றும் சானிட்டரி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்படும் என தாம் காத்திருந்த போதிலும், அரசாங்கம் தமது வியாபாரங்களை புறக்கணித்து ஏனைய அத்தியாவசியமற்ற பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி வருவதாக இலங்கையில் உள்ள டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டைல் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை அரசு நீக்குவதில் தாமதம் செய்வதால் தங்களது தொழில்கள் மீட்க முடியாத அளவுக்கு சரிந்து வருவதாக முக்கிய இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

டைல் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.ஜே.எம்.ஜௌபர் கூறியதாவது,


இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அவ்வாறு செய்யாததால், ஏறக்குறைய 300 நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்டு கிட்டத்தட்ட 100,000 நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

159 பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியுள்ள போதிலும், டைல்கள் மற்றும் சுகாதாரப் பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பாக டைல்ஸ் மற்றும் சானிட்டரி வர்த்தகப் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் டைல், சானிட்டரி பொருட்கள் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் samugammedia இலங்கையில் டைல் மற்றும் சானிட்டரி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்படும் என தாம் காத்திருந்த போதிலும், அரசாங்கம் தமது வியாபாரங்களை புறக்கணித்து ஏனைய அத்தியாவசியமற்ற பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி வருவதாக இலங்கையில் உள்ள டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.டைல் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை அரசு நீக்குவதில் தாமதம் செய்வதால் தங்களது தொழில்கள் மீட்க முடியாத அளவுக்கு சரிந்து வருவதாக முக்கிய இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.டைல் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.ஜே.எம்.ஜௌபர் கூறியதாவது,இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அவ்வாறு செய்யாததால், ஏறக்குறைய 300 நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்டு கிட்டத்தட்ட 100,000 நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.159 பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியுள்ள போதிலும், டைல்கள் மற்றும் சுகாதாரப் பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இது தொடர்பாக டைல்ஸ் மற்றும் சானிட்டரி வர்த்தகப் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. என அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement