வவுனியா தாதியர் பயிற்சிக்கல்லூரியின் தேவைப்பாடுகள், பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று (16.03.2026) தாதியர் பயிற்சிக்கல்லூரிக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
தாதியர் பயிற்சிக்கல்லூரி சமூகத்தின் கோரிக்கையின் பிரகாரம் இடம்பெற்ற இவ்விஜயத்தின் போது, தாதியர் பயிற்சிக்கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர், உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
அத்துடன் பயிற்சிக்கல்லூரி வளாகத்தையும் பார்வையிட்டதுடன், குறைபாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியிருந்தார்.
அடையாளம்காணப்பட்ட மற்றும் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள், தேவைப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுசென்று அவற்றினை தீர்த்துவைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தாதியர் பயிற்சிக்கல்லூரியின் செயற்பாடுகளை ஆராய்ந்த சத்தியலிங்கம் எம்.பி வவுனியா தாதியர் பயிற்சிக்கல்லூரியின் தேவைப்பாடுகள், பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று (16.03.2026) தாதியர் பயிற்சிக்கல்லூரிக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.தாதியர் பயிற்சிக்கல்லூரி சமூகத்தின் கோரிக்கையின் பிரகாரம் இடம்பெற்ற இவ்விஜயத்தின் போது, தாதியர் பயிற்சிக்கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர், உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.அத்துடன் பயிற்சிக்கல்லூரி வளாகத்தையும் பார்வையிட்டதுடன், குறைபாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியிருந்தார்.அடையாளம்காணப்பட்ட மற்றும் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள், தேவைப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுசென்று அவற்றினை தீர்த்துவைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.