• Apr 04 2025

இலங்கை வீட்டுப்பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு கட்டணம் தொடர்பில் சவூதி எடுத்த தீர்மானம்!

Chithra / Jan 17th 2024, 10:23 am
image

 

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டுப்பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது.

பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சினால் இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து வீட்டு பணியாளர் ஒருவரை ஆட்சேர்ப்பு செய்யும் போது அறவிடப்படும் கட்டணத்தை 15 ஆயிரம் சவூதிஅரேபிய ரியாலில் இருந்து 13 ஆயிரம் சவூதி அரேபிய ரியாலாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வூதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது

ஆட்சேர்ப்புத்துறையில் ஏற்பட்டுவரும் செலவுகளுக்கு ஏற்ப இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இலங்கை வீட்டுப்பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு கட்டணம் தொடர்பில் சவூதி எடுத்த தீர்மானம்  இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டுப்பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது.பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.சவூதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சினால் இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இலங்கையில் இருந்து வீட்டு பணியாளர் ஒருவரை ஆட்சேர்ப்பு செய்யும் போது அறவிடப்படும் கட்டணத்தை 15 ஆயிரம் சவூதிஅரேபிய ரியாலில் இருந்து 13 ஆயிரம் சவூதி அரேபிய ரியாலாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வூதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளதுஆட்சேர்ப்புத்துறையில் ஏற்பட்டுவரும் செலவுகளுக்கு ஏற்ப இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement