• Apr 13 2025

சிவப்பரிசியில் பச்சை அரிசியை கலந்து விற்பனை செய்யும் மோசடி!

Chithra / Jan 28th 2025, 10:48 am
image


சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சந்தையில் சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, இது தொடர்பாக சோதனைகளை நடத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர்  அசேல பண்டார தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களில், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தமை தொடர்பில் 140 க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புக்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த கம்பஹா பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

சிவப்பரிசியில் பச்சை அரிசியை கலந்து விற்பனை செய்யும் மோசடி சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.அதன்படி, இது தொடர்பாக சோதனைகளை நடத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர்  அசேல பண்டார தெரிவித்தார்.இதற்கிடையில், கடந்த சில நாட்களில், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தமை தொடர்பில் 140 க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புக்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த கம்பஹா பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement