• Sep 19 2024

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு! samugammedia

Tamil nila / Jul 3rd 2023, 7:26 pm
image

Advertisement

சித்திரமேழி பழணியானந்தன் சனசமூக நிலையம் மற்றும் கருகம்பனை இந்து இளைஞர் கழகம் ஆகிய இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்  பிரிவுகளை சேர்ந்த 45 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.


விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் ஊடாக, கடந்த பல ஆண்டுகளாக அதிஸ்ட இலாப சீட்டு விற்பனை மூலம் கிடக்கும் பணத்தை கொண்டு வடக்கு கிழக்கில் மாணவர்களின் கல்விக்கான உதவித்திட்டங்களை மேற்கெள்ளப்படுகிறது.


அந்தவகையில் இவ்வாண்டு அதிஸ்ட இலாப சீட்டிழுப்பு மூலமும் கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையம் நடாத்தி பெற்றுக் கொண்ட நிதிகளை கொண்டு வடக்கு கிழக்கில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டத்தின் முதலாவது நிகழ்வாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய்,மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்  பிரிவுகளை சேர்ந்த 45 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரும் குறித்த விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளருமான ச.தவசீலன் தலைமையில் நடந்த நிகழ்வில், துணுக்காய் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி பா.காந்தரூபன், ஒட்டறுத்தகுளம் கிராம அலுவலர் தவரூபன் சித்திரமேழி பழணியானந்தன், சனசமூக நிலைய தலைவர் மு.நிறஞ்சன், விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்ட குழுவினர், ஊடகவியலாளர் ஜெகதீஸ்வரன், டிசாந் ஆகியோர் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இதேவேளை புலம்பெயந்து வாழும் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவரினால் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து பயனாளிகளுக்கு தலா 6000 பெறுமதியான உலர் உணவு பொருட்களும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.


முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு samugammedia சித்திரமேழி பழணியானந்தன் சனசமூக நிலையம் மற்றும் கருகம்பனை இந்து இளைஞர் கழகம் ஆகிய இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்  பிரிவுகளை சேர்ந்த 45 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் ஊடாக, கடந்த பல ஆண்டுகளாக அதிஸ்ட இலாப சீட்டு விற்பனை மூலம் கிடக்கும் பணத்தை கொண்டு வடக்கு கிழக்கில் மாணவர்களின் கல்விக்கான உதவித்திட்டங்களை மேற்கெள்ளப்படுகிறது.அந்தவகையில் இவ்வாண்டு அதிஸ்ட இலாப சீட்டிழுப்பு மூலமும் கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையம் நடாத்தி பெற்றுக் கொண்ட நிதிகளை கொண்டு வடக்கு கிழக்கில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டத்தின் முதலாவது நிகழ்வாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய்,மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்  பிரிவுகளை சேர்ந்த 45 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரும் குறித்த விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளருமான ச.தவசீலன் தலைமையில் நடந்த நிகழ்வில், துணுக்காய் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி பா.காந்தரூபன், ஒட்டறுத்தகுளம் கிராம அலுவலர் தவரூபன் சித்திரமேழி பழணியானந்தன், சனசமூக நிலைய தலைவர் மு.நிறஞ்சன், விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்ட குழுவினர், ஊடகவியலாளர் ஜெகதீஸ்வரன், டிசாந் ஆகியோர் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.இதேவேளை புலம்பெயந்து வாழும் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவரினால் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து பயனாளிகளுக்கு தலா 6000 பெறுமதியான உலர் உணவு பொருட்களும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement