• May 19 2024

நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவியின் சடலம் - விசாரணையில் சிக்கிய முக்கிய ஆதாரம்! samugammedia

Tamil nila / May 9th 2023, 8:09 am
image

Advertisement

களுத்துறை தெற்கு - காலி வீதியில் உள்ள விடுதி ஒன்றின் பின்புறம் மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் சடலம் சட்ட வைத்தியரிடம் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாணவியின் உடல் உறுப்புகள் அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தங்குமிடமொன்றுக்கு அருகில் புகையிரத பாதை பகுதியிலிருந்து 16 வயது பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறு உயிரிழந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவிக்கையில், “இது மிகவும் பாரதூரமான நிலை, சட்ட நடைமுறையாக்கத்தால் மட்டுமே குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படமாட்டாது.

இந்த பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் உறவினர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.

பெற்றோர்கள், பாதுகாவலர்கள் குறிப்பாக இளம் பெண்களுடன் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எந்த வகையான நபர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பது குறித்து கவனமாக இருந்தால் இதுபோன்ற துயர சம்பவங்களை தவிர்க்கலாம்.

மேலும், இந்த வழக்கு தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்க முடியும் எனவும், காவல்துறை அவசர இலக்கமான 119க்கு அழைப்பதன் மூலமும் தகவல் வழங்க முடியும் எனவும் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 24 மணி நேர தொலைபேசி இலக்கமான 1929 க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவியின் சடலம் - விசாரணையில் சிக்கிய முக்கிய ஆதாரம் samugammedia களுத்துறை தெற்கு - காலி வீதியில் உள்ள விடுதி ஒன்றின் பின்புறம் மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் சடலம் சட்ட வைத்தியரிடம் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மாணவியின் உடல் உறுப்புகள் அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.தங்குமிடமொன்றுக்கு அருகில் புகையிரத பாதை பகுதியிலிருந்து 16 வயது பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இவ்வாறு உயிரிழந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவிக்கையில், “இது மிகவும் பாரதூரமான நிலை, சட்ட நடைமுறையாக்கத்தால் மட்டுமே குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படமாட்டாது.இந்த பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் உறவினர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.பெற்றோர்கள், பாதுகாவலர்கள் குறிப்பாக இளம் பெண்களுடன் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எந்த வகையான நபர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பது குறித்து கவனமாக இருந்தால் இதுபோன்ற துயர சம்பவங்களை தவிர்க்கலாம்.மேலும், இந்த வழக்கு தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்க முடியும் எனவும், காவல்துறை அவசர இலக்கமான 119க்கு அழைப்பதன் மூலமும் தகவல் வழங்க முடியும் எனவும் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 24 மணி நேர தொலைபேசி இலக்கமான 1929 க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement