• Apr 27 2024

பாடசாலை ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களின் போது பணம் அறவிடத் தடை! samugammedia

Chithra / Oct 15th 2023, 7:39 pm
image

Advertisement

 

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான புதிய சுற்றறிக்கையை மாகாண கல்வி செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அவர்கள் கற்பிக்கும் பாடத்தை அந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்துக்கு வெளியேயோ வார இறுதி நாட்களிலோ பணம் வசூலித்து கற்பிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த உத்தரவை மீறும் ஆசிரியர்களைக் கண்காணிக்க வட்டாரக் கல்வி பணிப்பாளர்கள், முதல்வர்கள், பாட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாடசாலை கண்காணிப்பு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் ஆசிரியர்கள் குறித்து பெற்றோர் முறைப்பாடு அளிக்குமாயின், மாகாண கல்வி அமைச்சின் உள்ளக கணக்காய்வு பிரிவுக்கு அல்லது 24 மணிநேரமும் இயங்கும் ஆளுநரின் பொது முறைப்பாடுகள் பணியகத்தின் 026 7500 500 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம் என சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களின் போது பணம் அறவிடத் தடை samugammedia  கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான புதிய சுற்றறிக்கையை மாகாண கல்வி செயலாளர் வெளியிட்டுள்ளார்.அவர்கள் கற்பிக்கும் பாடத்தை அந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்துக்கு வெளியேயோ வார இறுதி நாட்களிலோ பணம் வசூலித்து கற்பிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.அதன்படி, இந்த உத்தரவை மீறும் ஆசிரியர்களைக் கண்காணிக்க வட்டாரக் கல்வி பணிப்பாளர்கள், முதல்வர்கள், பாட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாடசாலை கண்காணிப்பு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை மீறும் ஆசிரியர்கள் குறித்து பெற்றோர் முறைப்பாடு அளிக்குமாயின், மாகாண கல்வி அமைச்சின் உள்ளக கணக்காய்வு பிரிவுக்கு அல்லது 24 மணிநேரமும் இயங்கும் ஆளுநரின் பொது முறைப்பாடுகள் பணியகத்தின் 026 7500 500 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம் என சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement