• Apr 23 2026

மாணவர்களுக்கான பாடசாலைச் சீருடை நன்கொடை; சீனாவிடம் இருந்து சான்றிதழ்களைப் பொறுப்பேற்ற பிரதமர்

Chithra / Apr 22nd 2026, 9:22 pm
image

2026ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மாணவர்களுக்கும், பிரிவேனாக்களின் மாணவ பிக்குகள், சீல மாதாக்கள் உள்ளிட்ட சகல மாணவர்களுக்கும் தேவையான அனைத்துச் சீருடைத் துணிகளும் சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக வழங்கி முடிக்கப்பட்டமையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு, நேற்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில்  இடம்பெற்றது.


இதன்போது, சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக 2026ஆம் ஆண்டின் மொத்தப் பாடசாலைச் சீருடைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக 11.484 மில்லியன் மீற்றர் துணிகள் வழங்கப்பட்டதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தும் சான்றிதழ் பரிமாற்றம், பிரதமருக்கும் இலங்கையின் சீனத் தூதுவர் Qi Zhenhong அவர்களுக்கும் இடையே இடம்பெற்றது. இதன் மூலம் பாடசாலைச் சீருடை வசதியினைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4.4 மில்லியனுக்கும் அதிகமாகும்.


இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்;


சீன மக்கள் குடியரசு எமது பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய இந்தச் சீருடை நன்கொடை, இரு நாடுகளுக்கிடையே நிலவும் உறுதியான ஒத்துழைப்பின் மிக முக்கியமான மைல்கல்லாக அமைகின்றது. எமது அரசாங்கம் எதிர்பார்க்கும் கல்வி மாற்றத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவதோடு, பொருளாதார மற்றும் சமூக ரீதியில் முன்னேறுவதற்குத் தேவையான ஆதரவையும் சீனா எமக்குத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.


பாடசாலைச் சீருடை என்பது சாதாரணமானதொரு விடயம் அல்ல, அது கௌரவம் மற்றும் சமத்துவம் சார்ந்த விடயமாகும். இந்தச் சீருடை வழங்கும் திட்டத்தின் மூலம் சமத்துவமின்மையைக் குறைத்து, பிள்ளைகளுக்கு நம்பிக்கையுடன் கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. 


அத்துடன், இலங்கையின் சீனத் தூதுவர் உட்பட தூதரக அதிகாரிகளும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் இந்த வேலைத்திட்டத்தை எவ்வித காலதாமதமுமின்றி நிறைவேற்றுவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன், எனத் தெரிவித்தார்.


இலங்கையின் சீனத் தூதுவர் கருத்துத் தெரிவிக்கையில்:


இந்த பாடசாலைச் சீருடை வழங்கும் திட்டம் தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கான டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சீனப் புலமைப்பரிசில்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் இலங்கையின் கல்வியை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றோம். இது சீன மற்றும் இலங்கை மக்களுக்கிடையே நிலவும் உறுதியான நட்புறவின் அடையாளம், எனத் தெரிவித்தார்.


மாணவர்களுக்கான பாடசாலைச் சீருடை நன்கொடை; சீனாவிடம் இருந்து சான்றிதழ்களைப் பொறுப்பேற்ற பிரதமர் 2026ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மாணவர்களுக்கும், பிரிவேனாக்களின் மாணவ பிக்குகள், சீல மாதாக்கள் உள்ளிட்ட சகல மாணவர்களுக்கும் தேவையான அனைத்துச் சீருடைத் துணிகளும் சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக வழங்கி முடிக்கப்பட்டமையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு, நேற்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில்  இடம்பெற்றது.இதன்போது, சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக 2026ஆம் ஆண்டின் மொத்தப் பாடசாலைச் சீருடைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக 11.484 மில்லியன் மீற்றர் துணிகள் வழங்கப்பட்டதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தும் சான்றிதழ் பரிமாற்றம், பிரதமருக்கும் இலங்கையின் சீனத் தூதுவர் Qi Zhenhong அவர்களுக்கும் இடையே இடம்பெற்றது. இதன் மூலம் பாடசாலைச் சீருடை வசதியினைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4.4 மில்லியனுக்கும் அதிகமாகும்.இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்;சீன மக்கள் குடியரசு எமது பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய இந்தச் சீருடை நன்கொடை, இரு நாடுகளுக்கிடையே நிலவும் உறுதியான ஒத்துழைப்பின் மிக முக்கியமான மைல்கல்லாக அமைகின்றது. எமது அரசாங்கம் எதிர்பார்க்கும் கல்வி மாற்றத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவதோடு, பொருளாதார மற்றும் சமூக ரீதியில் முன்னேறுவதற்குத் தேவையான ஆதரவையும் சீனா எமக்குத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.பாடசாலைச் சீருடை என்பது சாதாரணமானதொரு விடயம் அல்ல, அது கௌரவம் மற்றும் சமத்துவம் சார்ந்த விடயமாகும். இந்தச் சீருடை வழங்கும் திட்டத்தின் மூலம் சமத்துவமின்மையைக் குறைத்து, பிள்ளைகளுக்கு நம்பிக்கையுடன் கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. அத்துடன், இலங்கையின் சீனத் தூதுவர் உட்பட தூதரக அதிகாரிகளும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் இந்த வேலைத்திட்டத்தை எவ்வித காலதாமதமுமின்றி நிறைவேற்றுவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன், எனத் தெரிவித்தார்.இலங்கையின் சீனத் தூதுவர் கருத்துத் தெரிவிக்கையில்:இந்த பாடசாலைச் சீருடை வழங்கும் திட்டம் தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கான டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சீனப் புலமைப்பரிசில்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் இலங்கையின் கல்வியை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றோம். இது சீன மற்றும் இலங்கை மக்களுக்கிடையே நிலவும் உறுதியான நட்புறவின் அடையாளம், எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement