• Nov 26 2024

18 முதல் 20ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை! கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

Chithra / Jun 11th 2024, 11:04 am
image


 

பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி அனுராதபுரம் உயர்தரப் பாடசாலை, ஸ்வர்ணபாலி தேசிய பாடசாலை, வலிசிங்க ஹரிச்சந்திர உயர் பாடசாலை, 

நிவட்டகச்சேதிய தேசிய பாடசாலை, ஸாஹிரா தேசிய உயர் பாடசாலை, தேவனம்பியதிஸ்ஸ புர உயர் பாடசாலை, 

மகாபோதி உயர் பாடசாலை, மிஹிந்தலை உயர் பாடசாலை, மிஹிந்தலை கம்மலக்குளம கல்லூரி மற்றும் தந்திரிமலை ஆகிய கல்லூரிகள் மூடப்படவுள்ளன.

விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அந்த பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அநுராதபுரம் தேசிய பொசன் விழா குழுவினர் மற்றும் அனுராதபுர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவாபத்திரன ஆகியோர் வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய பாடசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

18 முதல் 20ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு  பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இதன்படி அனுராதபுரம் உயர்தரப் பாடசாலை, ஸ்வர்ணபாலி தேசிய பாடசாலை, வலிசிங்க ஹரிச்சந்திர உயர் பாடசாலை, நிவட்டகச்சேதிய தேசிய பாடசாலை, ஸாஹிரா தேசிய உயர் பாடசாலை, தேவனம்பியதிஸ்ஸ புர உயர் பாடசாலை, மகாபோதி உயர் பாடசாலை, மிஹிந்தலை உயர் பாடசாலை, மிஹிந்தலை கம்மலக்குளம கல்லூரி மற்றும் தந்திரிமலை ஆகிய கல்லூரிகள் மூடப்படவுள்ளன.விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அந்த பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும் அநுராதபுரம் தேசிய பொசன் விழா குழுவினர் மற்றும் அனுராதபுர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவாபத்திரன ஆகியோர் வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய பாடசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

Advertisement

Advertisement

Advertisement