கல்கிஸ்ஸை பகுதியில் அண்மையில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கல்கிஸ்ஸை - ஓடியன் பகுதியில் வைத்து கல்கிஸ்ஸை பிராந்திய குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளால் 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த கொலைக்கு ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை, ஓபன் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட இதுவரையில் ஐந்து சந்தேகநபர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
கல்கிஸ்ஸை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது கல்கிஸ்ஸை பகுதியில் அண்மையில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கல்கிஸ்ஸை - ஓடியன் பகுதியில் வைத்து கல்கிஸ்ஸை பிராந்திய குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளால் 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். குறித்த கொலைக்கு ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை, ஓபன் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட இதுவரையில் ஐந்து சந்தேகநபர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.