நாட்டின் பல பகுதிகளில் இன்று வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என்று அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யயக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாட்டி வதைக்கும் வெப்பம் , சில பகுதிகளில் மழை - வெளியான எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் இன்று வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும் வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என்று அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யயக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .