• May 11 2024

யாழில் திடீரென உச்சத்தை தொட்ட கடலுணவுகள்!SamugamMedia

Sharmi / Feb 15th 2023, 10:08 am
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக காலநிலை வேறுபாட்டால் மீனவர்களின் வலைகளில் கடலுணவுகள் அதிகளவில் பிடிபடாததால் அவற்றின் விலை சூடுபிடித்துக் காணப்படுகின்றன.


நகரை அண்டிய சந்தைகளுக்கு கடலுணவுகள் போதியளவு வந்து சேராததால் அவற்றுக்கு பற்றாக்குறை நிலவி வருவதோடு விலையும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

பாஷையூர்,கொட்டடி,குருநகர், நாவாந்துறை மீன் சந்தைகளில் இவ்வாறு கடலுணவுகள் அதிகரித்த விலையில் விற்கப்படுகின்றன.



அதன்படி ஒரு கிலோ இறால் 2ஆயிரம் ரூபாவாகவும் ஒரு கிலோ நண்டு ஆயிரத்து 800 ரூபாவாகவும் ஒரு கிலோ கணவாய் ஆயிரத்து 600 ரூபாவாகவும் ஒரு கிலோ மீன் ஆயிரத்து 400 ரூபாவாகவும் விற்கப்படுகின்றது.



யாழில் திடீரென உச்சத்தை தொட்ட கடலுணவுகள்SamugamMedia யாழ்ப்பாணத்தில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக காலநிலை வேறுபாட்டால் மீனவர்களின் வலைகளில் கடலுணவுகள் அதிகளவில் பிடிபடாததால் அவற்றின் விலை சூடுபிடித்துக் காணப்படுகின்றன.நகரை அண்டிய சந்தைகளுக்கு கடலுணவுகள் போதியளவு வந்து சேராததால் அவற்றுக்கு பற்றாக்குறை நிலவி வருவதோடு விலையும் அதிகரித்துக் காணப்படுகின்றன.பாஷையூர்,கொட்டடி,குருநகர், நாவாந்துறை மீன் சந்தைகளில் இவ்வாறு கடலுணவுகள் அதிகரித்த விலையில் விற்கப்படுகின்றன. அதன்படி ஒரு கிலோ இறால் 2ஆயிரம் ரூபாவாகவும் ஒரு கிலோ நண்டு ஆயிரத்து 800 ரூபாவாகவும் ஒரு கிலோ கணவாய் ஆயிரத்து 600 ரூபாவாகவும் ஒரு கிலோ மீன் ஆயிரத்து 400 ரூபாவாகவும் விற்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement