• Oct 30 2024

பருவ காலம் ஆரம்பம் - கிழக்கில் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு!

Chithra / Mar 4th 2024, 4:14 pm
image

Advertisement

 

இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக  நேற்று  புறா மலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக  உலக வன ஜீவராசிகள் தினமான நேற்று ஆளுநரால் உத்தியோகபூர்வமாக புறா மலை  திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நிலாவெளி சுற்றுலா அபிவிருத்தி குழு,திருகோணமலை ஹோட்டல் சங்கம் மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுற்றுலா பணியக தவிசாளர் மதன்,வனவிலங்கு ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


பருவ காலம் ஆரம்பம் - கிழக்கில் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு  இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக  நேற்று  புறா மலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக  உலக வன ஜீவராசிகள் தினமான நேற்று ஆளுநரால் உத்தியோகபூர்வமாக புறா மலை  திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வுக் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நிலாவெளி சுற்றுலா அபிவிருத்தி குழு,திருகோணமலை ஹோட்டல் சங்கம் மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் சுற்றுலா பணியக தவிசாளர் மதன்,வனவிலங்கு ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement