• Feb 06 2025

யுவதி மீது அத்துமீறல்: ஊவா மாகாண ஆளுநரின் மகனை தேடும் பொலிஸார்..!

Chithra / Mar 4th 2024, 4:22 pm
image

 

கொழும்பு ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாத் ஜமால்தீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இஷாத் ஜமால்தீனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைளை மேற்கொண்டுவந்தாலும் தொடர்ந்தும் அவர் தலைமறைவாக உள்ளார்.

எவ்வாறாயினும், நேற்று அவருடைய சொகுசு வாகனமும் ஒரு தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தனது மகன் எங்கேயும் ஒழியவில்லை. அவர் நாளை சரியான நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் சரணடைவார் என்று ஆளுநர் முஸம்மில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

யுவதி மீது அத்துமீறல்: ஊவா மாகாண ஆளுநரின் மகனை தேடும் பொலிஸார்.  கொழும்பு ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாத் ஜமால்தீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாக இஷாத் ஜமால்தீனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைளை மேற்கொண்டுவந்தாலும் தொடர்ந்தும் அவர் தலைமறைவாக உள்ளார்.எவ்வாறாயினும், நேற்று அவருடைய சொகுசு வாகனமும் ஒரு தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.தனது மகன் எங்கேயும் ஒழியவில்லை. அவர் நாளை சரியான நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் சரணடைவார் என்று ஆளுநர் முஸம்மில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.எனினும் பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement