• Apr 26 2024

கொழும்பில், பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு! SamugamMedia

Tamil nila / Feb 26th 2023, 6:25 pm
image

Advertisement

கொழும்பு நகரின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. படையினருக்கு மேலதிகமாக இராணுவத்தின் கலகமடக்கும் பிரிவினரும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.


தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை தடுப்பதற்காக, வீதிகள் பல பூட்டப்பட்டுள்ளன.


கொழும்பில், வைத்தியசாலை சுற்றுவட்டம், பித்தள சந்தி, யூனியன் பிளேஸ், கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட இடங்களிலுள்ள வீதிகள் பூட்டப்பட்டுள்ளன.


தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டமும் பேரணியும், தாமரை தடாகம் பக்கத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. அந்த சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இந்த பேரணியால், கொழும்பு கோட்டை, நகர மண்டபம், கொள்ளுப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸ், இராணுவத்தின் கலகமடக்கும் பிரிவு, விசேட அதிரடிப்படை ஆகியனவும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளன.




கொழும்பில், பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு SamugamMedia கொழும்பு நகரின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. படையினருக்கு மேலதிகமாக இராணுவத்தின் கலகமடக்கும் பிரிவினரும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை தடுப்பதற்காக, வீதிகள் பல பூட்டப்பட்டுள்ளன.கொழும்பில், வைத்தியசாலை சுற்றுவட்டம், பித்தள சந்தி, யூனியன் பிளேஸ், கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட இடங்களிலுள்ள வீதிகள் பூட்டப்பட்டுள்ளன.தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டமும் பேரணியும், தாமரை தடாகம் பக்கத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. அந்த சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த பேரணியால், கொழும்பு கோட்டை, நகர மண்டபம், கொள்ளுப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸ், இராணுவத்தின் கலகமடக்கும் பிரிவு, விசேட அதிரடிப்படை ஆகியனவும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement