• Mar 05 2025

செம்மணி எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட இடத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! -பொலிசாருடன் உறுப்பினர்களும் இணைவு

Thansita / Mar 4th 2025, 10:38 pm
image

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் மற்றும் தடயங்கள் தொடர்பான கலந்தாய்வு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி வ.ஆனந்தராஜா தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது

முறைப்பாட்டாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் , காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தின் சார்பில் சட்டத்தரணி திரு.தற்பரனும் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, வெறுமனே பொலிஸாரை மாத்திரம் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தாமல், சித்துப்பாத்தி இந்து மயானத்தின் அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்களையும் பாதுகாப்பு பணிகளில் உள்வாங்குகின்றபோது பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என்ற விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

இந்த கோரிக்கையை ஏற்று சித்துப்பாத்தி இந்து மயானத்தின் அபிவிருத்தி சங்கத்தின் ஐந்து உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது

வழக்கானது தொடர் விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டது.

செம்மணி எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட இடத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு -பொலிசாருடன் உறுப்பினர்களும் இணைவு செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் மற்றும் தடயங்கள் தொடர்பான கலந்தாய்வு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி வ.ஆனந்தராஜா தலைமையில் இன்றையதினம் நடைபெற்றதுமுறைப்பாட்டாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் , காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தின் சார்பில் சட்டத்தரணி திரு.தற்பரனும் ஆஜராகியிருந்தனர்.இதன்போது, வெறுமனே பொலிஸாரை மாத்திரம் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தாமல், சித்துப்பாத்தி இந்து மயானத்தின் அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்களையும் பாதுகாப்பு பணிகளில் உள்வாங்குகின்றபோது பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என்ற விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று சித்துப்பாத்தி இந்து மயானத்தின் அபிவிருத்தி சங்கத்தின் ஐந்து உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதுவழக்கானது தொடர் விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement