வவுனியா மாவட்டத்தில் உள்ள நீச்சல் தடாகங்களை மக்கள் பயன்படுத்தும் போது அங்கு நீச்சல் தெரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தப்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்றைய தினம் நீச்சல் தடாகத்தில் இளைஞன் ஒருவன் பலியாகியதை எடுத்து வைத்தியசாலைக்கு விஜயம் சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் உள்ள நீச்சல் தடாகங்களில் நீச்சல் தெரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இல்லாத நிலையில் இயங்கி வருகின்றன. இதனால் கடந்த காலங்களிலும் சில அசம்பாவிதங்கள் இடம்பெற்று இருக்கின்றது.
எனவே எவராக இருந்தாலும் நீச்சல் தடாகத்தை இயக்குவதாக இருந்தால் அங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு அவர் முன்னிலையில் மக்கள் அதனை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் நடைமுறையை வவுனியா மாவட்டத்தில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நீச்சல் தடாகத்துக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் ஜெகதீஸ்வரன் எம்பி வவுனியா மாவட்டத்தில் உள்ள நீச்சல் தடாகங்களை மக்கள் பயன்படுத்தும் போது அங்கு நீச்சல் தெரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தப்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.வவுனியாவில் நேற்றைய தினம் நீச்சல் தடாகத்தில் இளைஞன் ஒருவன் பலியாகியதை எடுத்து வைத்தியசாலைக்கு விஜயம் சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,வவுனியாவில் உள்ள நீச்சல் தடாகங்களில் நீச்சல் தெரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இல்லாத நிலையில் இயங்கி வருகின்றன. இதனால் கடந்த காலங்களிலும் சில அசம்பாவிதங்கள் இடம்பெற்று இருக்கின்றது.எனவே எவராக இருந்தாலும் நீச்சல் தடாகத்தை இயக்குவதாக இருந்தால் அங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு அவர் முன்னிலையில் மக்கள் அதனை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் நடைமுறையை வவுனியா மாவட்டத்தில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.