• Nov 25 2024

பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள்- பதில் பொலிஸ்மா அதிபர் யாழ் விஜயம்!

Tamil nila / Oct 19th 2024, 8:13 pm
image

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான  பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும்,  தெரிவாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் பி.ப 03.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் விசேடமாக பதில் பொலிஸ்மா அதிபர்  பிரியந்த வீரசூரிய அவர்கள் கலந்துகொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினார். 



இச் செயலமர்வில்  சிரேஷ்ட வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர்  ரி. சி. ஏ. தனபால,  பிரதிப் பொலிஸ்மா அதிபர். றுவான் குணசேகர, பிரதிப் பொலிஸ்மா அதிபர் (கிளிநொச்சி)  சமந்த டி. சில்வா,  மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. சிறிமோகனன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் . டி. எல். ஏ. சூர்யபண்டார, பொலிஸ் அத்தியட்சகர் எம். எம். சந்தன ஹமகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், முறைப்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் உதவித் தெரிவாட்சி அலுவலர் உட்பட சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.



இக் கலந்துரையாடல் சனாதிபதி தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள்  மற்றும் தேர்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளுக்கு  எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு ஆராயப்பட்டன.




பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள்- பதில் பொலிஸ்மா அதிபர் யாழ் விஜயம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான  பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும்,  தெரிவாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் பி.ப 03.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இச் செயலமர்வில் விசேடமாக பதில் பொலிஸ்மா அதிபர்  பிரியந்த வீரசூரிய அவர்கள் கலந்துகொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினார். இச் செயலமர்வில்  சிரேஷ்ட வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர்  ரி. சி. ஏ. தனபால,  பிரதிப் பொலிஸ்மா அதிபர். றுவான் குணசேகர, பிரதிப் பொலிஸ்மா அதிபர் (கிளிநொச்சி)  சமந்த டி. சில்வா,  மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. சிறிமோகனன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் . டி. எல். ஏ. சூர்யபண்டார, பொலிஸ் அத்தியட்சகர் எம். எம். சந்தன ஹமகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், முறைப்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் உதவித் தெரிவாட்சி அலுவலர் உட்பட சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.இக் கலந்துரையாடல் சனாதிபதி தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள்  மற்றும் தேர்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளுக்கு  எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு ஆராயப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement