• May 02 2024

குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்- தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு..!

Chithra / Mar 31st 2024, 10:41 am
image

Advertisement

 

இயேசு பிரான் உயிர்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவ மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு வழிபாட்டின்போது குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இம்முறை உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொஷான் மகேசனின் தலைமையில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களுக்காக விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டதுடன் நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய தினம் வழிபாடுகள் நிறைவடையும் நேரத்தில் மட்டும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவாலயத்தின் பாதுகாப்பிற்கு வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை புத்தளம் சாந்த மரியா ஆலயத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் ஈஸர் தின ஆராதனைகள் இடம்பெற்றன.

ஆலய அருட்தந்தை சுசிரு தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது.

இதன்போது ஈஸ்டர் பண்டிகை ஆராதனை பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து திருப்பலியை ஒப்புகொடுத்தனர்.


குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்- தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு.  இயேசு பிரான் உயிர்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவ மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு வழிபாட்டின்போது குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இம்முறை உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொஷான் மகேசனின் தலைமையில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களுக்காக விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டதுடன் நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.இன்றைய தினம் வழிபாடுகள் நிறைவடையும் நேரத்தில் மட்டும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவாலயத்தின் பாதுகாப்பிற்கு வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை புத்தளம் சாந்த மரியா ஆலயத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் ஈஸர் தின ஆராதனைகள் இடம்பெற்றன.ஆலய அருட்தந்தை சுசிரு தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது.இதன்போது ஈஸ்டர் பண்டிகை ஆராதனை பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து திருப்பலியை ஒப்புகொடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement