• May 13 2024

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு – விசேட அதிரடிப் படையினரும் குவிப்பு! samugammedia

Chithra / Nov 20th 2023, 1:46 pm
image

Advertisement

 

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் இன்று நண்பகல் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வீதியில் இரும்பு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டு அங்கு விசேட அதிரடிப் படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் போராட்டம் இடம்பெறலாம் எனும் அச்சுறுத்தல் காரணமாக குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் மீது உறவினர்கள் குற்றஞ்சாட்டும் நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஒரு விசாரணையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தினால் பிறிதாக ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு – விசேட அதிரடிப் படையினரும் குவிப்பு samugammedia  யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் இன்று நண்பகல் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வீதியில் இரும்பு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டு அங்கு விசேட அதிரடிப் படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.அப்பகுதியில் போராட்டம் இடம்பெறலாம் எனும் அச்சுறுத்தல் காரணமாக குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவின்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் மீது உறவினர்கள் குற்றஞ்சாட்டும் நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஒரு விசாரணையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தினால் பிறிதாக ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement