• Feb 02 2025

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் சேவை நலன் பாராட்டு விழா..!

Sharmi / Feb 1st 2025, 11:41 pm
image

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மா.இளஞ்செழியனின் சேவை நலன் பாராட்டு விழா இன்றையதினம்(01) வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில், வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில்  இந்நிகழ்வு இடம்பெற்றது.

முன்னதாக ஏ9 பிரதான வீதியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து நீதிபதி மா.இளஞ்செழியன் வரவேற்கப்பட்டதுடன்,  அவரது 27 வருட நீதித் துறை சேவையை பாராட்டி வடக்கு - கிழக்கு பகுதிகளில் இருந்து வருகை தந்த மேல் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற, நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், வடக்கு - கிழக்கைச் சேர்ந்த சட்டத்தரணிகள் எனப் பலரும் அவரது சேவையை பாராட்டி கௌரவிப்புக்களை வழங்கியிருந்தனர்.

நீதித்துறையில் 27 வருடத்தை பூர்த்தி செய்த முதல் தமிழ நீதிபதியாக கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மேன்முறையீட்டு நீதிமன்ற  நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் அரசங்கத்தின் இழுத்தடிப்புகளாலும், கால தாமங்களாலும் அவர் ஓய்வு நிலைக்கு செல்கின்றார். 

இருப்பினும் அந்த பதவி  நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு வழங்கப்பட வேண்டும் எனப் பலரும் இதன் போது கருத்து தெரிவித்தனர். 



வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் சேவை நலன் பாராட்டு விழா. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மா.இளஞ்செழியனின் சேவை நலன் பாராட்டு விழா இன்றையதினம்(01) வவுனியாவில் இடம்பெற்றது.வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில், வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில்  இந்நிகழ்வு இடம்பெற்றது.முன்னதாக ஏ9 பிரதான வீதியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து நீதிபதி மா.இளஞ்செழியன் வரவேற்கப்பட்டதுடன்,  அவரது 27 வருட நீதித் துறை சேவையை பாராட்டி வடக்கு - கிழக்கு பகுதிகளில் இருந்து வருகை தந்த மேல் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற, நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், வடக்கு - கிழக்கைச் சேர்ந்த சட்டத்தரணிகள் எனப் பலரும் அவரது சேவையை பாராட்டி கௌரவிப்புக்களை வழங்கியிருந்தனர்.நீதித்துறையில் 27 வருடத்தை பூர்த்தி செய்த முதல் தமிழ நீதிபதியாக கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மேன்முறையீட்டு நீதிமன்ற  நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் அரசங்கத்தின் இழுத்தடிப்புகளாலும், கால தாமங்களாலும் அவர் ஓய்வு நிலைக்கு செல்கின்றார். இருப்பினும் அந்த பதவி  நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு வழங்கப்பட வேண்டும் எனப் பலரும் இதன் போது கருத்து தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement