• Oct 18 2024

பாதுகாப்பு வழங்கப்பட்டால் சேவைகள் ஆரம்பிக்கப்படும்..! புத்தூர் மருந்தகத்தின் கோரிக்கை samugammedia

Chithra / Apr 30th 2023, 1:37 pm
image

Advertisement

உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டால் புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்தின் சேவைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (2) ஆரம்பிக்க முடியுமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புத்தூர் வைத்தியசாலையில் புகுந்து தாக்குதல் நடத்தி வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தையடுத்து வைத்தியசாலையின் சேவைகள் இதுவரை இடம்பெறவில்லை.

தற்போது வைத்தியசாலைக்கு பொலிசாரின் பாதுகாப்பு 24 மணி நேரமும் வழங்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் சேவையினைத் தொடர்வதற்கு வைத்தியசாலையின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என வைத்தியசாலையின் வைத்தியர் கோரியுள்ளார்.

அத்துடன் வைத்தியசாலையில் கண்காணிப்பு கமரா மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டால் அதனை வைத்திய சங்கத்தினர் பரிசீலனை செய்து வைத்தியரை தொடர்ந்து பணி செய்வதற்கு அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர்.

அச்சுறுத்தல் விடுத்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த காரணத்தால் தொடர்ந்தும் அவ்வாறான நிலை தோன்றலாம் என வைத்தியர் அச்சமடைந்துள்ளார்.

எனவே வைத்தியர் தனது சேவையினை மீண்டும் தொடர்வதற்கு வைத்தியசாலையின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் அவ்வாறு உறுதிப்படுத்தினால் தொடர்ந்தும் சேவையை மேற்கொள்ள முடியும் என வைத்தியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

பாதுகாப்பு வழங்கப்பட்டால் சேவைகள் ஆரம்பிக்கப்படும். புத்தூர் மருந்தகத்தின் கோரிக்கை samugammedia உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டால் புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்தின் சேவைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (2) ஆரம்பிக்க முடியுமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.புத்தூர் வைத்தியசாலையில் புகுந்து தாக்குதல் நடத்தி வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தையடுத்து வைத்தியசாலையின் சேவைகள் இதுவரை இடம்பெறவில்லை.தற்போது வைத்தியசாலைக்கு பொலிசாரின் பாதுகாப்பு 24 மணி நேரமும் வழங்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் சேவையினைத் தொடர்வதற்கு வைத்தியசாலையின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என வைத்தியசாலையின் வைத்தியர் கோரியுள்ளார்.அத்துடன் வைத்தியசாலையில் கண்காணிப்பு கமரா மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டால் அதனை வைத்திய சங்கத்தினர் பரிசீலனை செய்து வைத்தியரை தொடர்ந்து பணி செய்வதற்கு அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர்.அச்சுறுத்தல் விடுத்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த காரணத்தால் தொடர்ந்தும் அவ்வாறான நிலை தோன்றலாம் என வைத்தியர் அச்சமடைந்துள்ளார்.எனவே வைத்தியர் தனது சேவையினை மீண்டும் தொடர்வதற்கு வைத்தியசாலையின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் அவ்வாறு உறுதிப்படுத்தினால் தொடர்ந்தும் சேவையை மேற்கொள்ள முடியும் என வைத்தியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement